கூகுள் மேப் செயலியில் அறிமுகம்; புதிய ‘ஸ்ட்ரீட் வியூ’ அம்சம்!

கூகுள் மேப் செயலியில் அறிமுகம்; புதிய ‘ஸ்ட்ரீட் வியூ’ அம்சம்!

கூகுள் மேப் செயலியில் இந்தியாவில் சென்னை உள்பட 10 நகரங்களின் 'ஸ்ட்ரீட் வியூ' அம்சத்தை கூகுள் நிறுவனம் இன்று புதிதாக அறிமுகம் செய்துள்ளது.  

-இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு சார்பாக தெரிவித்ததாவது:

கூகுள் மேப் செயலியில் இதுவரை மேற்கத்திய நாடுகளின் தெரு மற்றும் இருப்பிடங்களை அவற்றின் புகைப்படங்களுடன் காணும் வசதி உள்ளது. ஆனால் இந்தியாவில் இதுவரை அந்த வசதி செய்யப்படவில்லை. இந்நிலையில் கூகுள் மேப் செயலியில் இந்தியாவின் இரு தனியார் நிறுவனங்களின் உதவியுடன் 'ஸ்ட்ரீட் வியூ' அம்சம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட இடங்களின் தெளிவான புகைப்படங்களையும் கண்டறிய முடியும். இந்தியாவில் சென்னை, பெங்களூரு, தில்லி, மும்பை, ஹைதராபாத், புனே, வதோதரா, அமிர்தசரஸ் உள்ளிட்ட நகரங்கள் இந்த 'ஸ்ட்ரீட் வியூ' அம்சத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த நகரங்களில் சுமார் 1.5 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை 'ஸ்ட்ரீட் வியூ' அம்சம் மூலம் புகைப்படங்களாக பார்க்க  இயலும்.

-இவ்வாறு கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com