5 மணி நேரம் ஸ்கேட்டிங்: கரூரில் 3 வயது சிறுமி உலக சாதனை!

5 மணி நேரம் ஸ்கேட்டிங்: கரூரில் 3 வயது சிறுமி உலக சாதனை!

கரூரைச் சேர்ந்த 3 வயது சிறுமி 5 மணி நேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

கரூரைச் சேர்ந்த கருப்பையாற்றும் லதாவின் மகளான 3 வயது மாதங்கி ஸ்ரீ ஸ்கேட்டிங்கில் சாதனை படைத்து வருகிறார். கடந்த மாதத்தில் கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விளையாட்டு மைதானத்தில் தொடர்ந்து 5 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை படைத்துள்ளார். அதாவது இடைவிடாமல் தொடர்ந்து 5 மணி நேரத்தில் 365 சுற்றுகளில் 26.5 கி.மீ தூரம் ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

மாதங்கி ஶ்ரீ  இந்த உலக சாதனையை நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தின் இந்தியா சிஇஓ அரவிந்த், தேசிய தொழில்நுட்ப இயக்குனர் மற்றும் தேசிய நடுவர்கள் லாவன்யா, ரஞ்சித் ஆகியோர் முன்னிலையில் நிகழ்த்திக் காட்டினார். 

இதையடுத்து மாதங்கி ஶ்ரீயின் இந்த உலக சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கப் பட்டுள்ளது. வெறும் 3 வயதேயான இச்சிறுமியின் சாதனை பெரும் வரவேர்பைப் பெற்றுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com