பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பாஜக பேரணி: கோட்டை நோக்கி ஊர்வலம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பாஜக பேரணி: கோட்டை நோக்கி ஊர்வலம்!

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி, தமிழக பாஜகவினர் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடத்துவதைத் தொடர்ந்து போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்த நிலையில், டெல்லி உட்பட பல மாநிலங்களில் அவற்றின் விலை குறைந்து விற்பனையாகி வருகிறது. இதேபோன்று தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில்  இதுகுறித்து  தமிழக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி தமிழக அரசுக்கு 72 மணி நேரம் அவகாசம் தருகிறோம். அதற்குள் விலையைக் குறைக்காவிட்டால், பிஜேபி சார்பில் பேரணி நடத்தி கோட்டையை முற்றுகையிடுவோம்.

-இவ்வாறு அண்ணாமலை அறிவித்தார்.

இந்நிலையில்  தமிழகத்தில் ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்காத பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று ( மே 31) கோட்டையை நோக்கி பேரணி நடைபெறும் என அறிவித்தார். இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், சென்னை எழும்பூரிலிருந்து கோட்டையை நோக்கி பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தொடங்க உள்ள பேரணியில் பங்கேற்க பாஜகவினர் வருகை தந்துள்ளனர். இதனால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைமைச் செயலகம் அமைந்துள்ள ராஜாஜி சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து, பேருந்து உள்ளிட்ட வாகனங்களை சோதனைக்கு பின்னரே அனுமதியளித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com