காவிரி டெல்டா மாவட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

காவிரி டெல்டா மாவட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழ மற்றும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக பெருமழையும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. இந்நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை நீரில் மூழ்கி, சேதமுற்ற பயிர்களை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிடச் சென்றுள்ளார்.

-இதுகுறித்து தமிழக அரசு வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பு:

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழைவெள்ளத்தால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவற்றை ஆய்வு செய்ய தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன், ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைவெள்ளத்தில் மூழ்கியுள்ள சம்பா பயிர்களை ஆய்வு மேற்கொண்ட இக்குழுவினர், பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களின் பாதிப்புகளை முதல்வர் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக நேற்று சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு சென்றார். இன்று காலை எழரை மணிக்கு காரில் புறப்பட்டு கடலூர் மாவட்டம் அரங்கமங்கலம், அடூர் அகரம்; ஆகிய பகுதிகளை பார்வையிடுகிறார். பின்னர் மயிலாடுதுறை மாவட்டத்தில், இருக்கூர், தரங்கம்பாடி பகுதிகளுக்கு சென்று, நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிகிறார்.

காலை 11:30க்கு நாகப்பட்டினம் மாவட்டம், கருங்கனி, அருந்தவபுலம்; பகுதிகளிலும், தொடர்ந்து திருவாரூர் மாவட்டம், ராயநல்லூர், புழுதிக்குடி ஆகிய பகுதகளை பார்வையிட்டு மன்னார்குடி திரும்புகிறார். மன்னார்குடியிலிருந்து மாலையில் புறப்பட்டு தஞ்சாவூர் மாவட்டம், பெரியக்கோட்டை பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார். பின்னர் இரவு சாலை மார்க்கமாக காரில் சென்னை திரும்புகிறார்.

-இவ்வாறு தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com