கேரளாவில் 7 இடங்களில் நிலச்சரிவு: சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை!

கேரளாவில் 7 இடங்களில் நிலச்சரிவு: சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை!

Published on

கேரளாவில் தொடர் மழை காரணமாக 7 இடங்களில் நிலச்சரிவு மற்றும் பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

சபரி மலை ஐயப்பன் ஆலயத்தில் கார்த்திகை மாத மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப் பட்டது. இங்கு வந்து தரிசிக்க பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்வதால், பெரியாறு, பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 15-ம் தேதி முதல் பக்தர்கள் பம்பையில் நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 10-ம் தேதி முதல் கேரளாவில் 7 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com