கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: கோழிகள், வாத்துகள் தமிழகம் கொண்டுவர தடை!

கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: கோழிகள், வாத்துகள் தமிழகம் கொண்டுவர தடை!

கேரளாவில் பறவிக் காய்ச்சல் அதிகரித்துள்ளதால், அங்கிருந்து கோழிகள், வாத்துகள் மற்றும் முட்டைகளை தமிழகம் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கேரளாவில் பறவைகாய்ச்சல் அதிகரித்துள்ல நிலையில், தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கையாக கேரள எல்லையில் 26 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவில் வாத்துகளுக்கு பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

அதையடுத்து, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகியமாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கேரளாவிலிருந்து கோழிகள், வாத்துகள் மற்றும் அவற்றின் முட்டைகளை தமிழகத்துக்கு கொண்டுவர தடைவிதிக்கப் பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வாகனங்களில் வரும் கோழிகள், வாத்துகள், அதன் முட்டைகள் மற்றும் கோழியினம் சார்ந்த பொருட்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்படுகிறது. கேரளாவிலிருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும், அனைத்து கோழிப்பண்ணைகளிலும் தீவிரபாதுகாப்பு நடைமுறைகளைகையாள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-இவ்வாறு தமிழக அரசு அறிக்கை வெளீயிட்டுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com