மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக முகாம் நடத்துங்கள்: காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தர்ணா போராட்டம்!

மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக முகாம் நடத்துங்கள்: காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தர்ணா போராட்டம்!

காங்கிரஸ் கட்சியின் கரூர் தொகுதி எம்.பியான ஜோதிமணி, மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் முகாமை தன் தொகுதியில் நடத்தும்படி கோரி கலக்டர் ஆபீஸ் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜோதிமணீ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப் படவில்லை. அவர்களுக்கு உபகரணங்கள் வழங்க உடனடியாக முகாம் நடத்தப்பட வேண்டும். இந்த சிறப்பு முகாம் நடத்த கோரி கடந்த ஆறு மாதங்களாக வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசு மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்கப்படும் நலத்திட்டங்கள் எதுவும் இந்த தொகுதியில் செயல்படுத்தப் படவில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக இந்த சிறப்பு முகாம் எப்போது நடத்தப்படும் என ஆட்சியர் உறுதி அளித்தால் மட்டுமே இந்த தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவேன்.

இவ்வாறு ஜோதிமணி கூறினார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com