மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறும்; வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி!
மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிச்சயம் நடைபெறும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியானது தொடங்கிய நிலையில், மதுரையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நிகழ்வை வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் கொரோனா 3-ம் அலையை கட்டுக்குள் கொண்டு வர இன்றுமுதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்கான நடவடிக்கையை முதல்வர் ஸ்டாலின் எடுத்து வருகிறார். மதுரையில் 3ஆம் அலையை எதிர்கொள்ள அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன.மாவட்டம் முழுவதும் கிராமம் கிராமமாக சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ள விழிப்புணர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது..
மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிச்சயம் நடைபெறும். ஜல்லிகட்டு நடத்துவது குறித்து முதல்வர் இன்று அறிவிக்க வாய்ப்புள்ளது. அப்படி அவர் அறிவித்த உடன் இந்த பொங்கலுக்கு போர்க்கால அடிப்படையில் மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறூ அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். இன்று அதிகாலை மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த முகூர்த்த கால் நடப்பட்டது குறிப்பிடத்தக்து.