நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் இன்று ஆலோசனை கூட்டம்! Se

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:  நடிகர் விஜயின்  மக்கள் இயக்கம் இன்று ஆலோசனை கூட்டம்! Se

தமிழகத்தில் வருகிற 19-ம் தேதி, மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சிக்கு உட்பட்ட 12,838 வார்டு உறுப்பினர் பதவிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 169 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் போட்டியின்றியும், 115 இடங்களில் போட்டியிடும் வென்ற விஜய் மக்கள் இயக்கம் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் களமிறங்குவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு மாவட்ட செயலாளர்கள் இன்று வருகை தருகின்றனர். இன்று காலை 9 மணிக்கு வேட்பாளர் தேர்வு குறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புதிய ஆனந்த் தலைமையில் ஆலோசனை நடைபெறுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com