
– மாயா சேகர், மும்பை
தேவையானவை:
ஊற வைத்து அரைத்த நிலக்கடலை பால் – 1 கப்,
பாதாம் -, முந்திரி அரைத்த பால் – 1 கப்,
பசும் பால் – 1/2 கப்,
ஏலப்பொடி – 1/2 ஸ்பூன்,
பச்சை கற்பூரம் – கடுகளவு,
பனை வெல்லம் – தேவைக்கேற்ப.
செய்முறை:
ஊற வைத்து அரைத்த நிலக்கடலை பால், பாதாம் – முந்திரி பால் இரண்டையும் பசும் பாலில் சேர்த்து பச்சை வாசனை போகா வேகவிடவும். அத்துடன் ஏலப்பொடி, பச்சை கற்பூரம் சேர்த்து கொதிக்கவிட்டு, பச்சை வாசனை போனவுடன் பனை வெல்லம் சேர்த்து கலக்கவும். இந்த பாயசத்தை காலை – மாலை இருவேளை சாப்பிட்டு வர, பித்தப்பை கல், சிறுநீரக பாதிப்பு, நரம்பு மண்டல பாதிப்பு சரியாகும். இந்த பாயசம் இந்த உபாதைகள் சரியாக உதவுகிறது.