ஒமிக்ரான் வைரஸ் பரவல்: மீண்டும் இரவுநேர ஊரடங்கு அமல்?

ஒமிக்ரான் வைரஸ் பரவல்: மீண்டும் இரவுநேர ஊரடங்கு அமல்?

நாடு முழுவதும் ஒமிக்ரான வைரஸ் பரவல் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ல நிலையில், மீண்டும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப் படலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிததில் தெரிவித்ததாவது:

தெனாப்பிரிக்காவில் உருவாகி, உலகின் பல நாடுகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியிருக்கும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் நம் நாட்டிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒமைக்ரான் தொற்று இரண்டு மடங்கு வேகமாக பரவும் தன்மையுடையது என்பதால், கொரோனா தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம்.

இவ்வாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com