போர்ப்ஸ் பத்திரிகை அட்டையில் நயன்தாரா: சூப்பர் டூப்பர் நடிகையாக புகழாரம்!

போர்ப்ஸ் பத்திரிகை அட்டையில் நயன்தாரா: சூப்பர் டூப்பர் நடிகையாக புகழாரம்!

போர்ப்ஸ் இந்தியா பத்த்ரிகை தனது சமீபத்திய இதழின் அட்டைப்படத்தில் நயன்தாராவின் படத்தை வெளியிட்டு 'சூப்பர் டூப்பர் நடிகை' என புகழாரம் சூட்டியுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா தமிழின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் அவரது படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.சிம்பு, பிரபுதேவாவுடனான நயன்தாராவின் காதலும், பிரிவும் அவரது திரையுலக மார்க்கெட்டை பாதிக்கவில்லை.இந்நிலையில் ' நானும் ரௌடிதான்' படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் விரைவில் திருமணம் செய்வர் என எதிர்பார்க்கப் படுகிறது.


இந்நிலையில் பிரபல போர்ப்ஸ் இதழின் இந்திய பதிப்பில் நயன்தாராவின் புகைப்படத்தை அட்டைப் படமாக வெளியிட்டு, பெருமைப்படுத்தியுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் முன்னணியில் இருக்கும் சூப்பர் டூப்பர் நடிகை என புகழ்ந்துள்ளது. நயன்தாரா இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


நயன்தாரா நடித்திருக்கும் அண்ணாத்த தீபாவளிக்கு வெளியாகிறது. இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் வெளியாக உள்ளது. அத்துடன் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்திப் படத்தில் நடிக்கிறார். யுவராஜ் தயாளனின் புதிய படம், மலையாளத்தில் தயாராகும் கோல்ட், தெலுங்கில் தயாராகும் சிரஞ்சீவியின் காட்ஃபாதர் படங்களும் நயன்தாரா கைவசம் உள்ளன.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com