ஸ்வீட் பிரெட், ஆப்பிள் அல்வா.

ஸ்வீட் பிரெட், ஆப்பிள் அல்வா.

ஜெகதா நாராயணசாமி, சென்னை.

தேவையானவை:-

ஆப்பிள் துருவல் 2 கப்

ஸ்வீட் பிரெட் தூள்(6ஸ்லைஸ்) – 1கப்

வெல்லம் 3/4கப்

முந்திரி 10

திராட்சை10

ஏலத்தூள் 1ஸ்பூன்

வெண்ணிலா எஸன்ஸ் 1டீஸ்பூன்

நெய் 4 டேபிள்ஸ்பூன்

உப்பு 1டீஸ்பூன்

தண்ணீர் – சிறிது

செய்முறை:-
ஆப்பிளை துருவவும்.பிரெட் ஸ்லைஸை மிக்ஸியில் பொடிக்கவும். வெல்லம் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, சிறிது உப்பு, வெல்லம் போட்டு, கரைந்து கொதித்ததும் ஆறவிட்டு வடிகட்டிக் கொள்ளவும்.அடிகனமான பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெய்விட்டு உருகினதும், முந்திரி, திராட்சையை சிவக்க வறுத்து தட்டில் எடுத்துக் கொள்ளவும்.

மீதமுள்ள நெய்யில் துருவின ஆப்பிளை போட்டு நன்கு வதங்கியதும், பொடித்த பிரெட் தூளை போடவும்.இரண்டும் நன்கு வதங்கினதும், வெல்லக் கரைசலை சிறிது சிறிதாக விட்டு அடுப்பை சிறிய தில் வைத்து கட்டியில்லாமல் கிளறவும்.சுருள வந்ததும், சிறிது நெய்விடவும்.பிறகு வறுத்த முந்திரி, திராட்சையை போடவும்.நன்கு கலந்து வெந்ததும், ஏலத்தூள் போடவும்.மீதமுள்ள நெய்யை விட்டு அடுப்பை நிறுத்திவிட்டு வெண்ணிலா எஸன்ஸ் விடவும்.சுருள ஒட்டாமல் வந்து, அல்வா ஆறினதும் ஒரு பௌலில் போட்டு மேலே வறுத்த முந்திரியை வைத்து அலங்கரிக்கவும்.இப்போது, சுடசுட, வித்தியாசமான,ஸ்வீட் பிரெட், ஆப்பிள் அல்வா தயார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com