டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: அறையிறுதிக்கு தகுதி பெறுமா இந்தியா?

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: அறையிறுதிக்கு தகுதி பெறுமா இந்தியா?

துபாயில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு வலுவடைந்துள்ளதாகக் கருதப் படுகிறது.

நேற்று இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கிடையே நடந்த போட்டியில், டாஸ்வென்ற இந்தியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அந்த வகையில் ஆட்டத்தின் முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணீ 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி ஒவ்வொரு பந்திலும் பவுண்டரி என்ற கணக்கிற்கு துவம்சம் செய்தனர். ரோகித் சர்மா 16 பந்துகளில் 30 ரன்களுக்கு வெளியேறினார். இதே போல் மறுமுணையில் விளையாடிய கே.எல்.ராகுல் 18 பந்துகளில் அரைசதம் விளாசி சாதனையை புரிந்தார். இதனால் 6.3 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டிப்பிடித்தது.

இதையடுத்து புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியும் 4-வது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் அணியும் வருகிற புதன்கிழமை (நவம்பர் 7) மோதுகிறது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்று, இந்திய அணி நமீபியாவை அதிக ரன் வித்தியாசத்தில் வீழ்த்தினால் இந்தியா அரையிறுதிக்கு செல்ல தகுதி பெறும். அதனால் நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் போட்டி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com