தமிழ் சினிமாவில் புதிய நாயகி: சிஎஸ்கே அணி வீரரின் தங்கை அறிமுகம்!

தமிழ் சினிமாவில் புதிய நாயகி: சிஎஸ்கே அணி வீரரின் தங்கை அறிமுகம்!

தமிழில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிப்பில் உருவாகவிருக்கும் படத்தில் சிஎஸ்கே அணி வீரரின் தங்கை அறிமுகமாகவுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் அண்மையில் பிக்பாஸ் கவின் நடிப்பில் ஊர்க்குருவி என்ற படத்தை தயாரிக்கவுள்ளதாக அறிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து அடுத்ததாக 'வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்' என்ற படத்தை தயாரிக்கவுள்ளனர்.

 

இந்த படத்தில் சிஎஸ்கே கிரிக்கெட் அணி வீரர் தீபக் சஹரின் தங்கை மால்டி சஹர் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் விநாயக் இயக்குகிறார்.

மால்டி சஹர் இதற்கு முன்பு குறும்படங்களிலும், வெப்சீரிசிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com