தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ்? சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்தவருக்கு பரிசோதனை!

தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ்? சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்தவருக்கு பரிசோதனை!

சிங்கப்பூரிலிருந்து நேற்று நள்ளிரவு விமானத்தில் திருச்சி வந்து சேர்ந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்ததாவது:

 சிங்கப்பூரிலிருந்து நேற்று நள்ளிரவு திருச்சி வநத பயணிகளுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டதில், தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு பயணிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அது ஒமைக்ரான் தொற்றா என்பதைக் கண்டறிய, அதன் மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப் பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பின்னரே இந்நபர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப் பட்டவரா என்பது தெரிய வரும். இப்போது கொரோனா தொற்றுக்கு ஆளான அந்த விமானப் பயணி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் திருச்சி விமான நிலையம் வந்த விமானப் பயணிகள் 477 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் கொரோனா இல்லை. சிங்கப்பூரில் ஏற்கனவே ஒமைக்ரான் கொரோனா பரவியுள்ள நிலையில் அங்கிருந்து வரும் பயணிகளை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com