தண்டுக் கீரை கடையல்

தண்டுக் கீரை கடையல்

கவிதாபாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி

தேவை:

1 கட்டு தண்டுக்கீரை

10 சின்ன வெங்காயம்

1 தக்காளி

1பச்சை மிளகாய்

3 வத்தல் மிளகாய்

1 ஸ்பூன் கடுகு உளுந்தப்பருப்பு,சீரகம்

3 ஸ்பூன் எண்ணெய்

3 டம்ளர் தண்ணீர்

தேவைக்கேற்ப உப்பு

6 பல் பூண்டு

செய்முறை:

கீரையை நன்றாக கழுவி வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும் ஒருபாத்திரத்தில் 3 டம்ளர் தண்ணீர் விட்டு கொதித்ததும் முதலில் வெங்காயம் சேர்க்கவும் பின் பூண்டு, பச்சை மிளகாய்,தக்காளி என வரிசையாகக் சேர்க்கவும் இவை பாதியளவு வெந்ததும் கீரையைச் சேர்க்கவும் 5 நிமிடம் வேக விடவும் கீரை நன்கு வெந்ததும் அடுப்பை அணைக்கவும் பிறகு அதில் இருக்கும் தண்ணீரை சுத்தமான பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும் கீரையில் உப்புச் சேர்த்து பருப்பு மத்தால் கடையவும் பின் ஒருக்கரண்டியில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்தப்பருப்பு,சீரகம்,வத்தல் போட்டு தாளிப்பிற்காக தயார்ச் செய்யவும். பின் தாளிப்பை கீரையில் கொட்டிக் கொள்ளவும் கலந்து விடவும் இப்போது உப்பு,காரம் என அனைத்தும் சேர்ந்ததும் எடுத்து வைத்த தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும். சுவையான கீரை கடையல் தயார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com