திரட்டிப் பால்

திரட்டிப் பால்

Published on

-சுமதி நாராயணன். சென்னை.

தேவை: திக்கான பால் – 2 லிட்டர். தயிர் – 1 டீஸ்பூன், சர்க்கரை – அரைக் கிலோ, ஏலக்காய்த்தூள் – 3 டீஸ்பூன். நெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அடிகனமான ஒரு வாணலியில் அல்லது நான்ஸ்டிக பான் ஒன்றில் பாலை விட்டு காய்ச்சவும். அடுப்பை மெல்லிய தீயில் வைக்கவும். பாத்திரத்தில் பால் அடிப்பிடிக்காமல் இருக்க, பாதியளவு நெய் சேர்த்து அடிக்கடி கிளறவும். பாதியாக பால் சுருங்கியதும், தயிர் சேர்த்து (அப்போதுதான் திரட்டிப் பால் மணல் மணலாக வரும்) கிளறவும். கோவா பதத்துக்கு பால் இறுகி அந்ததும் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும். மீதமுள்ள நெய் சேர்த்து திரட்டிப் பால் சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும். வேறு பாத்திரத்தில் திரட்டிப் பாலை எடுத்து வைக்கவும்.

logo
Kalki Online
kalkionline.com