கோப்ரா -சீற்றம் குறைவு!

கோப்ரா -சீற்றம் குறைவு!

-ராகவ் குமார் 

சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள படம் கோப்ரா.சரி.. கதை என்ன?!

ரஷ்யா, ஸ்காட்லேண்ட் உட்பட பல்வேறு இடங்களில் பணத்துக்காக கொலை செய்கிறார் மதியழகன்.(விக்ரம் ). இன்டர்போல் அதிகாரியான இர்பான் பதான் இந்த கொலைகளுக்கான பின்னணியை கண்டறிய முயல்கிறார்.

இந்த ஒவ்வொரு கொலைகளுக்கு பின்னால் ஒரு கணித சூட்சமம் இருக்கிறது என்று புரிய வைக்கிறார் மாணவியான ஜூடி (மீனாட்சி )இந்த  சூட்சமங்களை உடைத்து மதியை நெருங்கும் போது மதியை போலவே இன்னொருவர் அறிமுகம் ஆகிறார். இவர்களில் யார் கொலைகாரர், எதற்காக இந்த கொலைகள் என்று படம் செல்கிறது.

படத்தின் முதல் பாதி விறுவிறுப்பு, நல்ல விஷ்வல், என்று நகர்கிறது. இரண்டாம் பாதி  அம்மா செண்டிமெண்ட்,  சகோதரர்கள் சண்டையிட்டு கொள்வது என நாம் பல படங்களில் பார்த்த காட்சிகள் வந்து போகின்றன.சயின்ஸ் fiction போல மேத்ஸ் fiction படமாக வந்து இருக்க வேண்டிய இப்படம் திரைக்கதை வலுவாக இல்லாததால் ஆவரேஜ் படமாக உள்ளது.

கோப்ராவில் மிகவும் சொல்லும்படியான விஷயம் – நடிகர்களின் நடிப்புதான். விக்ரம் வழக்கம் போலவே மிகவும் பிரமாதமாக நடித்துள்ளார். இரட்டை வேடங்களில் வித்தியாசமான உடல் மொழியை தந்துள்ளார்.

விக்ரமிற்கு அடுத்த படியாக நல்ல நடிப்பை தந்துள்ளவர் இர்பான் பதான். ஸ்டைல், அளவான நடிப்பு,என அசத்தி உள்ளார்.வில்லன் ரோஷன் மாத்யூவிற்கு நல்ல எதிர் காலம் உள்ளது.

ஸ்ரீ நிதி, மிருணாளினி,மீனாட்சி என மூன்று பெண்கள் இப்படத்தில் இருக்கிறார்கள் மிருணாளினி காதலும்,காதல் பிரிவும் என மனதில் நிற்கிறார்.மீனாட்சி நடிப்பில் நம் வீட்டு பெண்ணை போல இருக்கிறார். சரியான வாய்ப்பு தந்தால் அடுத்த கனவு கன்னி இவர்தான்.ஸ்ரீ நிதி வந்து போகிறார்.

ரகுமானின் இசையில் விவேகா, தாமரையின் பாடல்  வரிகள் இன்னமும் அழகு சேர்க்கிறது. புவன்-ஜான் ஆபிராகம் எடிட்டிங் போரடிக்கும் கட்சிகளில் கொஞ்சம் சுவாரசியபடுத்துகிறது. இருந்தும் கோப்ரா -சீற்றம் குறைவு.

கல்கி ஆனலைன் பார்வையில்: 3/5.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com