கேரளா மேயருக்கும் எம்.எல்.ஏ-வுக்கும் திருமணம்! 

கேரளா மேயருக்கும் எம்.எல்.ஏ-வுக்கும் திருமணம்! 

கேரளாவில்கடந்த 2021 –ம் ஆண்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில்திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு மேயராக கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

இவர் இந்தியாவிலேயே இளம் மேயர் ஆவார். இந்நிலையில் ஆர்யாவுக்கும் கோழிக்கோடு பாலசேரி தொகுதிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ-வானசச்சின் தேவுக்கும்  இன்று திருமணம் நடந்தது 

திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ஏகேஜி சென்டரில் நடந்த இந்த திருமணத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

திருமண விழாவில் கேரள மந்திரிகள் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டனர். 

மேலும் திருமணத்துக்கு வருபவர்களிடம் மணமக்கள் வைத்த கோரிக்கை 

திருமண வைபவத்தில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள் பரிசு பொருட்கள் அளிப்பதைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.அந்த பரிசு பொருட்களுக்கான தொகையை முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு அளிக்கலாம் அல்லது முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். 

இவ்வாறு மணமக்கள் வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com