அன்பு..அழகு அம்மா.. அமலா!

அன்பு..அழகு அம்மா.. அமலா!

-ராகவ் குமார்.

மிழ் சினிமாவில் 1980-களில் கொடி கட்டி பறந்த அமலாவை நாம் அவ்வளவு சுலபத்தில் மறக்க இயலாது. நாகர்ஜூனாவை திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் செட்டிலான அமலா நீண்ட இடைவெளிக்கு பின்பு அம்மா ரோலில் 'கணம்' படத்தில் நடிக்க வருகிறார்.

இப்படத்தின் டைரக்டர் ஸ்ரீ கார்த்தி தனது அம்மாவை மனதில் வைத்து இந்த கதாபாத்திரத்தை உருவாக்கினாராம். அந்த கதாபாத்திரத்துக்கு இறுதி வடிவம் தந்து பார்க்கும் போது அமலா வந்து விட்டார். கதையை கேட்ட அமலா உடனே ஒகே சொல்லி விட்டார்.

இந்த படம் தாய்க்கும் மகனுக்கும் உள்ள ஆத்மார்த்தமான அன்பை சொல்கிறது. டைம் ட்ராவெல் படங்களில் கடந்த காலங்களுக்கு சென்று தீயதை அழிப்பதை போன்று காட்டி இருப்பார்கள்.

ஆனால் முதல் முறையாக தாய்க்கும் மகனுக்கும் உள்ள அன்பை டைம் ட்ராவலிங்கில் காட்டி உள்ளார்.டைரக்டர் ஸ்ரீ கார்த்தி. 'எங்கேயும் எப்போதும் 'ஷரவானந்த் அன்பு மகனாக நடிக்கிறார்.

ரவி ராகவேந்திரா அமலாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.அமலா ஹீரோயினாக நடித்த காலங்களை போலவே இப்போதும் அழகாக இருப்பதாக சொல்கிறார்கள் அமலாவின் ரசிகர்கள்.

'கணம்' படத்தின் ட்ரைலர் வெளியாகி சில மணி நேரங்களில் பல மில்லியன் மக்கள் பார்த்துள்ளார்கள். இன்னமும் சில நாட்களில் இந்த அழகு அன்பு அம்மாவை திரையில் காணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com