‘ராவண கல்யாணம்’ 

‘ராவண கல்யாணம்’ 

லதானந்த் 

டிகர் சிம்ஹா மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகரான சந்தீப் மாதவ் இணைந்து நடிக்கும் 'ராவண கல்யாணம்' என்ற படத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

அறிமுக இயக்குநர் ஜே.வி.மது கிரண் இயக்கத்தில் தயாராகும் முதல் படைப்பு 'ராவண கல்யாணம்'. கதாநாயகிகளாக நடிகை தீப்ஸிகா மற்றும் புதுமுக நடிகை ரீது காயத்ரி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ரொமான்டிக் மாஸ் என்டர்டெயின்மென்ட் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ஹால்சியன் மூவிஸ் ஆகிய பட நிறுவனங்கள் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தை சிம்ஹா மற்றும் அல்லூரி சுரேஷ் ஆகிய இருவரும் இணைந்து வழங்குகிறார்கள். 

ஹைதராபாத்தில் நடைபெற்ற 'ராவண கல்யாணம்' படத்தின் தொடக்க விழாவில், திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டு படக் குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com