PS-1 ட்ரைலர் விழா; கமல்ஹாசன் பேச்சு!

PS-1 ட்ரைலர் விழா; கமல்ஹாசன் பேச்சு!

லதானந்த்

 அமரர் கல்கியின் புகழ்மிக்க படைப்பான 'பொன்னியின் செல்வன்' நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.

இந்த விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது: "மணி ரத்னம் வெற்றி பட்டியலில் இது முக்கிய படமாக இருக்கும். எங்கிருந்து இதை ஆரம்பிப்பது என்றும் தெரியவில்லை. மணி ரத்னம் கதை பற்றிச் சொல்ல நிறைய உள்ளது. இதை எம்.ஜி.ஆர் வாங்கி வைத்திருந்தார்.

அவர் சீக்கிரம் எடுத்துவிடு என்று சொன்னார் அப்போது புரியவில்லை. ஆனால், அந்த எண்ணம் அனைவருக்கும் வந்து விட்டது. நான் முயற்சி செய்தேன். ஆனால், என்னால் எடுக்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது.

மணி ரத்னம் வெற்றி பட்டியலில் முக்கியமான படமாக இது இருக்கும். மேடை அலங்காரத்திற்காக நான் இதை சொல்லவில்லை. ஷோலே மாதிரி ஒரு படம் எடுக்க முடியுமா என்று நினைத்து இருக்கோம். அது மாதிரி தான் இந்த படம்.

இது ஒரு சிறிய குடும்பம். இதில் பொறாமைப் பட நேரமில்லை. அதை இளம் வயதில் புரிந்து கொண்டவர் நானும் ரஜினியும். வந்திய தேவன் கதாப்பாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைக்க வேண்டும் என சிவாஜி சொன்னார்.

அதை கேட்ட எனக்கு ஷாக்காக இருந்தது. ஏனெனில் அந்த கேரக்டரில் நான் நடிக்க வேண்டும் என்றிருந்தேன். 'சரி சிவாஜி சாரே ரஜின்னு சொல்லிட்டாரே'ன்னு அதை விட்டு விட்டு, "அப்ப எனக்கு என்ன கேரக்டர்?" என்று கேட்டேன்.

"நீ அருண்மொழி வர்மன் கேரக்டர் செய்" என்றார். அது அன்று நடக்காமல் போனது. இன்று. ரஜினி செய்ய நினைத்த கேரக்டரில் கார்த்தியும், எனக்கான கேரக்டரில் ஜெயம்ரவியும் நடிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது.

வெற்றி வரும், தோல்வி வரும் ஆனால், அதைப் புரிந்து  கொள்ள வேண்டும்.

ஏ.ஆர். ரஹ்மானின் ஒவ்வொரு பாட்டும் என்னுடைய இதய துடிப்பை அதிகரித்தது. நீங்கள் எனக்காக போட்ட பாடலை நான் திரும்ப திரும்ப கேட்டு வந்தேன்.

-இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com