லைலாவைக் கொன்றது யார்?!

லைலாவைக் கொன்றது யார்?!

-ராகவ் குமார் 

விஜய் ஆண்டனி தன் படத்திற்கு வித்தியாசமான டைட்டில் வைத்து ரசிகர்களை ஈர்ப்பவர். அந்த வகையில் பிச்சைக்காரன், சைத்தான் படங்களை தொடர்ந்து இப்போது கொலை என்ற பெயரை டைட்டிலாக வைத்துள்ளார்.      

சஸ்பென்ஸ் திரில்லரை மய்யமாக கொண்ட கொலை படத்தின் ட்ரைலர் வெளியான பின்பு "லைலாவை கொன்றது யார்" என்ற ஹேஸ் டேக் பிரபலமாகி வருகிறது.பல மில்லியன் பார்வையாளர்கள்இப்படத்தின் ட்ரைலரை பார்த்துள்ளார்கள்.  

 பாலாஜி.கே. குமார் இப்படத்தை இயக்கி உள்ளார்.இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு 'விடியும் முன்' என்ற படத்தை இயக்கி உள்ளார். நாம் ஒரு படத்தை திரை அரங்கில் பார்த்தால் படத்தின் சவுண்ட் எபெக்ட் முழுமையாக கிடைக்கும்.

ஆனால் கைபேசியில் பார்த்தால் கிடைக்காது.ஆனால் இப்படத்தை கைபேசியில் பார்த்தால் கூட தியேட்டரில் பார்க்கும் எபெக்ட்டை உருவாக்கி உள்ளார்கள். ஆச்சாரியாவின் CG படத்தை ஹாலிவுட் தரத்திற்கு கொண்டு செல்கிறது. 

நம்ம பாக்ஸிங் பொண்ணு ரித்திக்கா சிங்தான் ஹீரோயின்.    

"டைரக்டர் பாலாஜி k. குமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு விடியும் முன் என்ற படத்தை இயக்கினார். மிக சிறந்த படமான விடியும் முன் பல்வேறு கரணங்களால் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற வில்லை ஆனால் கொலை இந்த மிக பெரிய வெற்றி பெற்று இயக்குனருக்கு மிக பெரிய பெயர் பெற்று தரும்" என்கிறார் விஜய் ஆண்டணி.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com