ஒரு கதை:மூன்று ஹீரோக்கள்!

ஒரு கதை:மூன்று ஹீரோக்கள்!

-ராகவ் குமார்.

நாம் சிறு வயதில் படித்த காமிக் புத்தகங்களை படித்து இருப்போம். இந்த கதைகளில் வரும் கேரக்டர்களை பற்றிய கற்பனைகளில் வாழ்ந்து இருப்போம். நண்பர்களுடன் பேசி மகிழ்ந்து இருப்போம்.இன்றைய இளம் டிஜிட்டல் தலைமுறைக்கு தெரியாத வாசிப்பு சுகம் அது.

இந்த காமிக்ஸ் புத்தகத்தை தந்து ஒரு பெரிய ஹீரோவிடம் கதை சொல்லி டேட்ஸ் வாங்கி இருக்கிறார் ஒரு டைரக்டர் என்றால் நம்ப முடிகிறதா? ஆம்.சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட் டைரக்டர் அயன் முகர்ஜி ஒரு காமிக் புத்தகத்தை நாகர்ஜுனாவிடம் தந்து ''இந்த புத்தகத்தில் இருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் தான் நீங்கள் நடிக்க போகிறீர்கள்'' என்றாராம். புத்தகத்தை வாசித்த சில நிமிடங்களில் கதை பிடித்து ஒகே சொல்லி விட்டார் நாகர்ஜுனா.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன இந்த கதையை நன்றாக  டெவெலப் செய்து பிராம்மாஸ்திரா என்ற பெயரில் ரெடி செய்து இருக்கிறார் டைரக்டர். அயன் முகர்ஜி. இப்படத்தில் ரன்வீர் கபூர் ஹீரோவாக நடிக்கிறார்.பிக் பி அமிதாப் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கிறார்.ராஜ மௌலி இப்படத்தை வெளியிடுகிறார்.

வடக்கும் தெற்கும் சந்திக்கும் இந்த படத்தில் வானாஸ்திரா, அக்னி அஸ்திரம் என பல அஸ்திரங்களை பற்றி பேசி உள்ளார்கள்.ஹீரோ ரன்வீர் அக்னி அஸ்திரத்தின் அம்சமாக உள்ளார். கதாநாயகியாக ஆலியா பட் நடித்துள்ளார்.

"அவஞ்சர்ஸ் போன்ற படங்களை பார்க்கும் போது நாம் ஏன் நம்ம புராண கதைகளை வைத்து படம் எடுக்க கூடாது என்ற எண்ணத்தில் இப்படத்தை உருவாக்கினேன் "என்கிறார் டைரக்டர்.பல மில்லியன் ரசிகர்கள் இப்படத்தின் ட்ரைலரை  பார்த்துள்ளார்கள்.

மொத்தம் மூன்று பகுதிகளை கொண்ட இப்படத்தின் முதல் பகுதி பிரம்மா ஸ்திரா -1 சிவா என்ற பெயரில் விரைவில் வெளியாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com