பெட்ரோல் பங்க்கில் உஷார் : நடன இயக்குநர் ஸ்ரீதர் எச்சரிக்கை!

பெட்ரோல் பங்க்கில் உஷார் : நடன இயக்குநர் ஸ்ரீதர் எச்சரிக்கை!

சென்னை தியாகராய நகர் பெட்ரோல் பங்கில் தனது பி.எம்.டபிள்யூ காருக்கு பெட்ரோல் போட்டு, கார் சக்கரத்தில் காற்றடிக்கும் போது அதன் கவர் திருடப் பட்டதாக சினிமா நடன இயக்குநர் ஸ்ரீதர் எச்சரித்துள்ளார்.

கடந்த 2006-ம் ஆண்டு இயக்குனர் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் பொய் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் ஸ்ரீதர் அதன் பிறகு 2008-ஆம் ஆண்டு நடிகர் நகுல் நடித்த காதலில் விழுந்தேன் படத்தில் "நாக்க முக்கா "பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார்.

சென்னை தியாகராய நகரில் வசித்து வரும் நடன இயக்குனர் ஸ்ரீதர் தியாகராய நகரில்  உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தனது பிஎம்டபிள்யூ விலை உயர்ந்த காருக்கு 5000 ரூபாய் பணம் செலுத்தி பெட்ரோல் போட்டதற்கு பிறகு காரின் சக்கரங்களுக்கு காத்து அடிக்க சென்றுள்ளார். அப்போது அந்த பெட்ரோல் பங்கில் பணியாற்றிய வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் தனது கவனத்தை திசை திருப்பி கார் சக்கரங்களில் இருந்த வால்யூம் கவர்களைத் திருடியதாக தெரிவித்தார்.

"உடனடியாக இதை கண்ட நான் காத்தடிக்கும் இயந்திரம் பெட்டியை திறக்க கோரி முறையிட்டேன் அந்த பெட்டியை திறந்து பார்க்கும் போது விலை உயர்ந்த கார் சக்கரங்களின் வால்யூம்  கவர்களைத் அதிகஅளவில் திருடி வைத்துள்ளது தெரிய வந்தது.

ஒரு சக்கரத்தின் வால் டியூப் கவரின் விலை 1000 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை இருக்கும். அசந்த நேரத்தில் இப்படி ஒரிஜினல் கவர்களை திருடி விட்டு, டூப்ளிகேட் கவர்களை பொருத்துகிறார்கள். மக்களே.. ஜாக்கிரதை" 

– இவ்வாறு வீடியோ மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்..

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com