வெஜிடபிள் சோள ரவை உப்புமா

வெஜிடபிள் சோள ரவை உப்புமா

சுதா திருநாராயணன், ஸ்ரீரங்கம்

தேவை:
சோள ரவை200 கிராம்
பீன்ஸ், குடமிளகாய், கேரட், முட்டைக்கோஸ் நறுக்கியது ஒரு கப்.
பச்சை மிளகாய் – 3
தக்காளி – 4
தோல் சீவிய இஞ்சி, கொத்துமல்லி, கருவேப்பிலை –சிறிது.

செய்முறை:
மிக்ஸியில் இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை, தக்காளிகளை போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். சோள ரவையை வறுத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெயில் கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு பெருங்காயபொடி தாளிக்கவும். நறுக்கிய காய்கறிகளை சேர்த்து லேசாக வதக்கவும். சோள ரவை எவ்வளவோ அதைப் போல் இரு மடங்கு தண்ணீரில் அரைத்த தக்காளி, மிளகாய் இஞ்சி கொத்துமல்லி விழுது கலந்து வதக்கிய கறிகாய் மேல் ஊற்றவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் தேவையான அளவு உப்பை சேர்க்கவும். வறுத்த சோள ரவையை கலந்து அடுப்பை சிம்மில் வைத்து உப்புமா கிண்டவும். சோள ரவை நன்கு காணும் என்பதால் ஒரு பங்குக்கு இரண்டரை பங்கு கூட நீர் சேர்க்கலாம். பத்து நிமிடம் மூடி வைத்து கிண்டவும். ஒடித்த 10 முந்திரிப் பருப்புகளை நெய்யில் வறுத்து மேலே சேர்க்கவும். கொத்துமல்லி தழையை பொடிப் பொடியாக நறுக்கி மேலே தூவவும். வறுத்த மிளகு பொடியை தூவி நன்கு கிளறி இறக்கினால் அட்டகாசமாக இருக்கும் உப்புமா. வெங்காயம் பிடித்தவர்கள் வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com