0,00 INR

No products in the cart.

ஏமாறாதே – ஏமாற்றாதே…

முகநூல் பக்கம்

ருத்துவத் துறை வியாபார மயமாகிவிட்டது இன்று நேற்று தொடங்கிய பிரச்னை அல்ல. 1985ல் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு capitation fee வசூலிக்கப்பட்டு மருத்துவக் கல்வி வியாபாரமானபோது தொடங்கியது. ஆரம்பத்தில் இதை எதிர்த்த அப்போதைய அரசு மருத்துவர்கள், அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குக்கூட நாளடைவில் தம் குழந்தைகளைச் சேர்க்க தனியார் கல்லூரிகளே புகலிடமாய் இருந்தது.
மருத்துவத்துறையில் கார்பரேட்கள் புகுந்தவுடன், target based medical practice ஆரம்பமானது. ஒவ்வொரு ஆய்வு, வைத்தியக் கருவியும் ஏன் மருத்துவர்கள், ஊழியர்களும் கூடஎவ்வளவு பொருள் ஈட்டித் தருவார்கள் என்பதே குறியானது.
மெடிகல் ஆடிட் மீட்டிங்குகளுக்கு பதிலாக மாதாந்திர sales audit மீட்டிங்குகள் நடத்தும் கார்பரேட்கள்தான் அதிகம்.
ஒரு வீடு வாங்க வேண்டும் என்றால் எவ்வளவு விஷயங்களை ஆராய்கிறோம். பில்டர், பில்டிங் தரமானது என்றால் சிறிது அதிகமாக செலவு செய்ய நாம் தயங்குவதில்லை. அதேபோல விளம்பரங்களை நம்பி நகைக்கடைகளில் ஒருமுறை மாட்டிய பின்னராவது சுதாரித்துக் கொள்கிறோம். வெண்டைக்காயை கூட ஒடித்துப் பார்த்து வாங்கும் நாம், மருத்துவமனை, டாக்டர் தேர்ந்தெடுப்பதை எவ்வளவு கவனமாகச் செய்ய வேண்டும்.
நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்…
1. உங்களுக்கான குடும்ப மருத்துவர் என ஒரு நல்ல general doctor ஐ identify செய்யுங்கள். அவர் reference ன் பேரில் மேல் சிகிச்சைக்கு செல்லுங்கள்.
2. Waiting hall Ac, படாடோப குஷன் sofa க்கள், டீவி விளம்பரங்கள் இவற்றுக்கெல்லாம் உங்களிடமிருந்து தான் வசூல் செய்யப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சுத்தம்-சுகாதாரம் வேறு, படாடோபம் வேறு. Ambience முக்கியம் என்பவர்கள் செலவைப் பற்றி புலம்பக் கூடாது. ஒரே சேலைக்கு T. Nagar லும், mallலிலும் வெவ்வேறு விலை. (even if its the same shop)
3.தரத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சங்கிலி மருத்துவமனைகள் தவிர பிற மருத்துவமனைகளின் பெயருக்காகக் செல்லாதீர்கள். அங்கு உங்களுக்கு வைத்தியம் செய்யப் போகும் மருத்துவர் பற்றி அறிந்த பின்னரே செல்ல வேண்டும்.சில சங்கிலித் தொடர் மருத்துவமனைகளில் அடையாறு ஆனந்த பவன் அளவுக்குக் கூட தரக்கட்டுப்பாட்டுக்கு மெனக்கெடுவதில்லை.
4.Emergency சூழ்நிலைகள் தவிர பிற நேரங்களில் பரிந்துரைக்கப்பட்ட Treatment, Surgery பற்றி உங்களுக்கு சந்தேகம் இருப்பின் ஒரு second opinion பெறுவதில் தவறில்லை. இரு மருத்துவர்களும் இருவேறு எதிர்துருவ advice கொடுத்தால், எது சரி என்று தீர்மானிப்பது உங்கள் சாமர்த்தியம். இந்த இடத்தில் ஒன்றை நன்றாக நினைவில் வையுங்கள். அன்றைய உங்கள் மனநிலைக்கு ஏற்றவாறு பேசும் மருத்துவரின் கூற்றையே உங்கள் மனம் சிறந்த தீர்வென்று நினைக்கும். உதாரணத்திற்கு, பலர் “உனக்கு ஒண்ணுமே இல்ல… நல்லா இருக்க… ” என்று சொல்பவர் மட்டுமே நல்ல மருத்துவர் என்று சொல்வதைப் பார்க்கிறேன். அவர் நல்ல மருத்துவராகவும் இருக்கலாம், நன்றாகப் பேசும் சுமார் மருத்துவராகவும் இருக்கலாம்.
5. சுயவைத்தியம், கை வைத்தியம், கூகுள் வைத்தியம், படிக்காத மேதைகளாக நம்மைச் சுற்றியுள்ளவர்கள் வழங்கும் expert advice இவற்றை follow செய்யும்போது நினைவில் கொள்ளவேண்டியது… “At your own risk”
6. எல்லாப் பிரச்னைகளுக்கும் மெடிகல் Insurance எடுப்பது ஒரு தீர்வாக இருக்கும்.. ஆனால் Insurance இருப்பதனால் தேவையற்ற Surgery செய்து கொள்ளாதீர்கள். Tsunami பாதித்த பகுதிகளில் அரசு கொடுத்த காப்பீடு பணத்திற்காகவே தேவையற்ற ஆபரேஷன் எனத் தெரிந்தே செய்த டாக்டர்களும் தெரிந்துகொண்டே செய்த நோயாளிகளும் உண்டு.. ” எப்படியும் கேட்டராக்ட் வரத்தானே போகுது. கவர்ன்மென்ட் காசு தரப்ப செஞ்சுடலாம்..”
‘ஏமாற்றுவது தவறு’ என்பது பழைய மொழி… ‘ஏமாறுவதும் தவறு’ என்பதே இன்றைய காலத்திற்கு ஏற்ற புதுமொழி.
எல்லாத் துறைகளையும் போன்றே மருத்துவத்துறையும் நல்லவர்களும், கெட்டவர்களும், சாதனையாளர்களும், போலிகளும் இரண்டறக் கலந்த
துறைதான்.. இந்தத் துறையில் இருப்பவர்கள் அனைவரும் தெய்வம் என்று நினைப்பது எவ்வளவு ஆபத்தானதோ, அதைவிட டேஞ்சர் துறையில் உள்ள அனைவரையுமே சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது…
டாக்டர் ரோஹிணி கிருஷ்ணா முகநூல் பக்கத்திலிருந்து

1 COMMENT

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

செல்சாரைத் தேடிய ரா.கி.ரா

1
சுஜாதா தேசிகன்                                             ...

உங்கள் குரல்

1
தடுப்பூசி போடுவதில் சாதனை படைத்துள்ள  தமிழக அரசை பாராட்டி, ’அந்தப் பணியை செம்மையாக நிறைவேற்றிய செவிலியர்கள்/மருத்துவர்கள் கடவுளின் தூதர்களாகப் பார்க்கப்படுவார்கள். அவர்களை மனதார பாராட்டி நன்றி சொல்லி பெருமிதம் கொள்வோம்’  என்ற கல்கியின்...

விமானத்தின் வேகத்தில் ரயில் பயணம் !

0
இஸ்ரோ விஞ்ஞானி சசிக்குமார் சந்திப்பு:  ராசி பாஸ்கர் “சக்கரத்திற்கும் சாலைக்கும் உள்ள உராய்வும், காற்றினால் ஏற்படும் உராய்வும், நாம் வேகமாகச் செல்வதற்குத் தடையாக இருப்பதோடு அதிக ஆற்றல் செலவினத்தை உருவாக்குகிறது. இந்த இடையூறுகளிலிருந்து விடுபட்டு வேகமாகப்...

போராடி அலையும் யானைகளின் கதை

0
சரஸ்வதி காயத்திரி (வாசிப்போம் - தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழு) வலசை அச்சுக்கு வருவதற்கு முன்பே விருது பெற்றிருக்கும் சு.வேணுகோபாலின் இரண்டாவது நாவல் என்ற சிறப்பும் இதற்கு உண்டு ஒரு விவசாயியாக , இந்த நிஜ உலகைப்...

காதலுக்கு மரியாதை

0
ஹர்ஷா தன் காதலுக்காக நாட்டின்  மன்னராகும் வாய்ப்பை தியாகம் செய்து முடி துறந்து சரித்திரத்தில் இடம் பெற்ற இளவரசர்களை நாம் அறிவோம். கடந்த சில ஆண்டுகளில் இங்கிலாந்து அரச குடும்பத்தில் கூட நிகழ்ந்திருக்கிறது,  பிரிட்டனின்...