எனக்கு கொலை மிரட்டல் வருகிறது: சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் புகார்!

எனக்கு கொலை மிரட்டல் வருகிறது: சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் புகார்!
Published on

சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த நடிகர் மோகன் சர்மா (வயது 75) சிறூ வயது முதல் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்லதாக கோரி, நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

 அதன் பின்னர் செய்தியாளர்களிடம் மோகன் சர்மா பேசியதாவது:

 கடந்த ஆண்டு மார்ச் மாதம் 5-ஆம் தேதியன்று சேத்துப்பட்டில் உள்ள என் வீட்டு வாசலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன் காரை நிறுத்திவிட்டு செனறார். அவரை காரை எடுக்க சொன்னதற்கு என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே ஒரு இரும்பு கம்பியை எடுத்து வந்து என்னை தாக்க முற்பட்டார்.  மேலும்,  எனக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு காரை எடுத்து சென்றார். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்திருந்தேன். ஆனாலும் இதுவரைக்கும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.. சென்னையில் 60 வருடங்களாக வசித்து வரும் எனக்கு தற்போது பாதுகாப்பு இல்லாதது போன்ற உணர்வு ஏற்பட்டு இருப்பதால் போலீசில் புகார் அளித்தேன்.

 -இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com