எங்களுக்கு வாக்களித்தால், மாநாடு படத்துக்கு டிக்கெட் ஃப்ரீ: தமிழக இளைஞர் காங்கிரஸ் அசத்தல்!

எங்களுக்கு வாக்களித்தால், மாநாடு படத்துக்கு டிக்கெட் ஃப்ரீ: தமிழக இளைஞர் காங்கிரஸ் அசத்தல்!
Published on

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் உள்ள இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது . புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய ,பிரத்யேக செயலி மூலம் நவம்பர் 7-ம் தேதி முதல் டிசம்பர் 7-ம் தேதி வரை தேர்தல் நடைபெற்று வருகிறது .

இதில் 19 வயது முதல் 35 வயது வரையுள்ள கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க இயலும் . தேர்தல் முடிய ஓரிரு நாட்களே உள்ள நிலையில் கோவை இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் நூதன முறையில் வாக்குகளை சேகரிக்கிறார்கள்..

கோவை திரையரங்கில் மாநாடு படம் பார்க்க, ஆதார் போன்ற

அடையாள அட்டையுடன் வரும் இளைஞர்களுக்கு  அந்த படத்துக்கான இலவச டிக்கெட் கொடுத்து, அவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினராக்கி, தங்களுக்கு ஓட்டு போட வைக்கின்றனர். இது சமூக வைரலாக பரவி வருகின்றது. தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதை தவிர்க்க பிரத்யேக செயலி மூலம் வாக்களிக்கும் முறையை அக்கட்சி ஏற்பாடு செய்திருந்தாலும், இப்படி நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com