என் உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி: ரஜினிகாந்த்!

என் உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி: ரஜினிகாந்த்!
Updated on

நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். இந்நிலையில் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

கடந்த அக்டோபர் 28-ம் தேதி மாலையில் லேசான மயக்க நிலையில் காவேரி மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். அவரது

இந்நிலையில் ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்கான ரத்தநாள மறுசுழற்சி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை மூலம் தெரிவித்தது. மேலும் அடுத்த சில நாள்கள் ஓய்வுக்குப் பின்னர் ரஜினி வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரது உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் 3 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு நேற்று இரவு வீடு திரும்பினார். அவருக்கு அவரது மனைவி லதா ஆரத்தி எடுத்து வரவேற்றார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன் டிவிட்ட்ர பக்கத்தில் தெரிவித்ததாவது:

என் உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி. சிகிச்சை முடிந்து நான் இப்போது நன்றாக இருக்கிறேன். என் ஆரோக்கியத்துக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் ரசிகர்களுக்கும் நலம் விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இவ்வாறு ரஜினிகாந்த் தன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com