
ஆண்டுதோறும் சினிமாத்துறையில் சேர்ந்த நடிகர், நடிகை உள்பட திரைப்படப்பிரிவை சேர்ந்த பல்வேறு கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. சினிமாவில் சினிமா கலைஞர்களுக்கு விருதுகளை வழங்குவது போல் சின்னத்திரையிலும் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 10வது வருடமாக விஜய் டிவியில் சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்களுக்கு அவர்களது திறமையை அங்கீகரிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் நேற்று இரவு ஒளிபரப்பட்டது.
விஜய் டிவில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களின் மனம்கவர்ந்த சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர், பாக்கியலட்சுமி, மகாநதி, மருமகள் போன்ற சீரியல்கள் டிஆர்பியில் முன்னணியில் வரும்.
ஆனால் ரசிகர்களை அதிகம் கவர்ந்த இந்த சீரியல்களை ஓரம்கட்டிவிட்டு ‘அய்யனார் துணை’ என்ற சீரியல் ரசிகர்கள் ஓட்டெடுப்பில் அதிக புள்ளிகளை பெற்றதுடன், அதிக விருதுகளையும் வென்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அந்த வகையில் இந்த சீரியல் Find Of The Year, சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த நடிகர், சிறந்த எழுத்தாளர் என 4 விருதுகளை தட்டித்தூக்கியுள்ளது.
நடிகர்கள், நடிகைகள் மற்றும் சிறந்த சீரியல் என விஜய் டிவி விருதுகளை வென்றவர்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
Find Of The Year என்ற விருது அய்யனார் துணை சீரியல் நடித்த அரவிந்த் மற்றும் மதுமிதாவுக்கும், சிறந்த ஜோடி என்கிற விருது மகாநதி சீரியலில் நடித்த விக்ரம் - காவேரிக்கும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த கதிர் - ராஜிக்கு Budding Pair என்கிற விருதும் கிடைத்துள்ளது.
அய்யனார் துணை சீரியல் ஒளிப்பதிவாளர் ஆர்.எஸ். சரவணனுக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதும், நடிகர் முன்னாவிற்கு சிறந்த நடிகர் விருதும் எழுத்தாளர் பிரியாவுக்கு சிறந்த எழுத்தாளர் விருதும் கிடைத்துள்ளது.
சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்த கோமதி பிரியாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த நகைச்சுவை நடிகர் விருது தங்கமகள் சீரியலில் கலக்கிய அம்பானி ஷங்கருக்கு கிடைத்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியலுக்கு சிறப்பு சாதனை விருது வழங்கப்பட்டது. குக் வித் கோமாளிக்கு ‘பிடித்த நகைச்சுவை நிகழ்ச்சி’ விருதும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ‘சிறந்த குடும்பம்’ என்கிற விருதையும் வென்றுள்ளன.