ஊர்வசி கையில் வைத்திருக்கும் இந்த குழந்தை பிரபல சீரியல் நடிகையா?

சுஜிதா
சுஜிதா

பிரபல நடிகர்களுடன் குழந்தையாக நடித்திருக்கும் இவர் ஒரு பிரபல சீரியல் நடிகை என்றால் அது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

திரையுலகினரின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் அவ்வபோது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் இவரா இது என ஆச்சரியப்படுகின்றனர். நாம் சிறுவயதில் பார்த்த படத்தில் குழந்தையாக நடித்திருக்கும் நபர் தற்போதும் நமக்கு பிடித்த ஒரு பிரபல நடிகர், நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

சுஜிதா
சுஜிதா

அப்படி ஒரு பிரபலத்தை தான் தற்போது பார்க்க போகிறோம். முந்தானை முடிச்சி படத்தில் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் சுஜிதா. தொடர்ந்து மந்திர புன்னகை உள்ளிட்ட படங்களில் 5 வயது சிறுவன், சிறுமியாக நடித்து அசத்தியிருப்பார். இது அந்த படங்களை பார்க்கும் போது நமக்கு தெரிந்திருக்காது.

சுஜிதா
சுஜிதா

தொடர்ந்து இளம்பெண்ணாக எஸ்.ஜே.சூர்யா இயக்கத்திலும், அஜித் நடிப்பிலும் வெளியான வாலி படத்தில் நடித்திருப்பார். இப்படி பல படங்களில் நடித்து அசத்திய அவர், தற்போது சின்னத்திரையில் அசத்தி வருகிறார்.

சுஜிதா
சுஜிதா

அதாவது 5 வருடங்கள் ஹிட்டாக ஓடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் தான் சுஜிதா. இவரே சிறுவயது குழந்தையாக பல படங்களில் நடித்திருப்பார். பெண்களுக்கு மிகவும் பிடித்த கேரக்டர் தான் தனலட்சுமி கேரக்டர். இந்த கேரக்டரால் பலரின் மனதை கவர்ந்தவர் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் கௌரி என்ற சீரியலில் நடிக்கவுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com