பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் தொகுப்பாளரான விஜய் சேதுபதி நிகழ்ச்சியை விட்டு விலகவுள்ளதாகவும், மீண்டும் கமலஹாசனே வரப்போவதாகம் ஒரு செய்தி வந்துள்ளது. இதனை யார் கூறினார், ஏன் மீண்டும் கமல் வருகிறார் என்று பார்ப்போமா?
விஜய் டிவியில் ஒவ்வொருமுறையும் மக்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ் தொடர். மொத்தம் இதுவரை 7 சீசன்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. 7 சீசனையும் தொகுத்து வழங்கியவர் உலகநாயகன் கமலஹாசன். வாரம் ஐந்து நாட்களைவிட கமல் வரும் இரண்டு நாட்கள் மட்டும் நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பு கிடைக்கும். கடந்த சீசனில் கமலஹாசன் ஒரு பக்கமே பேசுவதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
மேலும் சிலர் கமலை ட்ரோல் போட்டுத் தாக்கினர். மறுபக்கம் கமல் படத்திலும் அரசியலிலும் மிகவும் பிஸியாக இருந்து வந்தார். ஆகையால், அப்போதே அவர் நிகழ்ச்சியில் நீடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. அந்தவகையில் இந்த சீசனிலிருந்து அவர் விலகியது உறுதியானது.
இதனையடுத்து விஜய் சேதுபதி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக களமிறங்கினார். முதல் இரண்டு வாரங்கள் விஜய் சேதுபதியின் கேள்விகள், தக் ரிப்ளே போன்றவை ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்கபட்டன. ஆனால், போக போக விஜய் சேதுபதி இன்சல்ட் செய்வதுபோல் பேசுகிறார் என்று பேசினர். பின்னர் இப்போதுதான் கமலின் அருமை புரிகிறது. அனைவரின் கருத்துக்களையும் கேட்டு அழகாக பதில் சொல்வார் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. அந்தவகையில் இப்போது மீண்டும் அவரே வரப்போகிறார் என்ற செய்தி வந்திருக்கிறது.
மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணைத் தலைவர் கோவை தங்கவேலு, அடுத்த சீசனில் கமல்ஹாசன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
ஏனெனில், ரசிகர்கள் கணித்த எந்த காரணத்தாலும் கமல் பிக்பாஸை விட்டு விலகவில்லையாம். அவர் ஏஐ தொடர்பான படிப்பில் சேர்ந்ததாலேயே நிகழ்ச்சியில் தொடர முடியவில்லை என கூறப்படுகிறது.
அந்த படிப்பை முடித்துவிட்டு மீண்டும் அடுத்த சீசனில் கமல் இணைய வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒருவேளை கமல் மீண்டும் வந்தால், விஜய் சேதுபதி விலகிவிடுவாரே என்று மற்றொரு தரப்பினர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
