

அகதா கிறிஸ்டியின் செவன் டயல்ஸ் மிஸ்ட்டரி என்ற நாவலைத்தழுவி எடுக்கப்பட்ட மினி சீரிஸ் இது. மொத்தம் 3 எபிசோடுகள்; ஒவ்வொன்றும் 55 நிமிடங்கள். ஆக மொத்தம் 165 நிமிடங்கள் ஆகும். நெட்பிளிக்சில் தமிழ் டப்பிங்கில் பார்க்க முடியும்.
இந்த நாவல் அகதா கிறிஸ்டி புகழ் பெறுவதற்கு முன் 1929ல் எழுதப்பட்ட நாவல். நாவலும் பெரிய அளவில் பிரபலம் ஆகவில்லை. அதனால் திரைக்கதையில் சில மாற்றங்களுடன் வெளியாகி இருக்கிறது. கிறிஸ் சிப்மர் தான் திரைக்கதை எழுதியது. கிறிஸ் வீனி என்பவர் இயக்கி இருக்கிறார்.
ஸ்பாய்லர் அலெர்ட் (Spoiler Alert) :
நாயகியின் அப்பா மர்மமான முறையில் ஒரு எருது மோதி இறக்கிறார்.1920 ல் இந்த சம்பவம் நடக்கிறது. சில ஆண்டுகள் கழித்து 1925 ல் நாயகியும் , நாயகியின் அம்மாவும் ஒன்றாக வசிக்கிறார்கள். அப்பா இல்லாததால் கொஞ்சம் பணக்கஷ்டம். அதனால் அவர்கள் குடி இருப்பது போக மீதி மேன்ஷன்களை வாடகைக்கு விட்டிருக்கிறார்கள்.
அங்கே ஒரு பார்ட்டி நடக்கிறது. அதற்கு பல பணக்காரர்கள் வருகிறார்கள். நாயகியின் மனம் கவர்ந்த ஒரு நபரும் வருகிறார். அவர் தான் நாயகன். நாயகியிடம், 'அடுத்த வாரம் இன்னொரு இடத்தில் பார்ட்டி நடக்கிறது. அதற்கு உன்னை எதிர்பார்க்கிறேன்' என அழைப்பு விடுக்கிறார். நாயகியும் சம்மதிக்கிறார்.
நாயகன் நன்றாக உறங்கக்கூடியவர். அதனால் அவர் உறங்கும் அறையில் அவர் அறியாத வண்ணம் 8 அலாரம் அடிக்கும் அலாரம் டைம் பீஸ்களை அவரின் நண்பர்கள் ஒளித்து வைக்கிறார்கள். காலையில் அவர் பதறி அடித்துக்கொண்டு எழ வேண்டும் என்பது அவர்களது திட்டம்.
ஆனால் அடுத்த நாள் காலையில் அலாரம் அடிக்கும்போது நாயகன் எழவில்லை. மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் சொல்கிறது. ஆனால் நாயகிக்கு அதில் நம்பிக்கை இல்லை. 'அடுத்த வாரம் தன் காதலை வெளிப்படுத்த இருக்கும் நபர் எதற்கு தற்கொலை செய்யப்போகிறார்?' என்று நாயகிக்கு சந்தேகம்
இந்த கேசை நாயகி துப்பு துலக்க முற்படுகிறார். அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் தான் மீதி கதை.
நாயகி ஆக மியா மெக்கன்னா ப்ரூஸ் அருமையாக நடித்திருக்கிறார். சோனியா அகர்வால் + வினோதினி இருவரின் கலவையாக அவர் முகம் மிக அழகு. நாயகியின் அம்மாவாக ஹெலனா போனம் கார்ட்டர் கச்சிதமாக நடித்திருக்கிறார்.
மார்டின் பீமர் போலீஸ் ஆபீசர் ஆக நடித்திருக்கிறார். மற்ற அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் சிறப்பு.
சபாஷ் டைரக்டர்
1 நாயகியின் அப்பா, காதலன், நண்பன் ஆகிய 3 கொலைகளுக்கும் உள்ள தொடர்பை விவரிக்கும் விதம் அருமை.
2 இது ஒரு பீரியாடிக் பிலிம் என்பதால் ஆர்ட் டைரக்சன் பர்பெக்ட். அந்தக்கால கார்கள், வண்டிகள் , ஆடை வடிவமைப்பு அனைத்தும் துல்லியம்.
3 கொலையாளி யார் என்று தெரிந்த பின் அதற்குப்பின் வரும் இன்னொரு ட்விஸ்ட் அருமை.
4 செவன் டயல்ஸ் என்பது வாட்சா? இடத்தின் பெயரா? பார்ட்டியின் பெயரா? என்று மாற்றி மாற்றிக் குழப்புவது , பின் தெளிவது அருமை.
ரசித்த வசனங்கள் :
1. எல்லார் கிட்டேயும் சொல்லிட்டு இருந்தா அது ரகசியம் இல்லை.
2. மருந்தும், மதுவும் எப்போதும் ஆபத்துதான்.
3. ஒருவர் மனதில் என்ன இருக்கு என்பதை யாராலும் சொல்ல முடியாது.
4. பிரச்னையைத் தேடி போறவங்க தான் அதுல மாட்டிக்குவாங்க
5. சொல்றதை விட செய்யறது முதன்மையா இருக்கனும்
6. போலியானவங்களை கண்டுபிடிப்பது ஈசி, தன் மேல் எந்த தப்பும் இல்லைன்னு நிரூபித்துக்கொண்டே இருப்பார்கள்.
7. பசங்க தான் எப்போதும் காவலுக்கு இருக்கனும்.
8. என் கணவர் இல்லாததால் நான் கட்டுப்பாடு இல்லாம ஓடிட்டு இருக்கேன்.
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1. க்ளைமாக்ஸின் போது தெரிய வேண்டிய ட்விஸ்ட் அதற்கு முன்பே நம்மால் யூகிக்க முடிவது பலவீனம்.
2. பொதுவாக க்ரைம் திரில்லரில் முதலில் சந்தேகத்துக்கு இடமாக சிலரைக்காட்டி விட்டு க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ஆக வேறு ஒரு நபரைகாட்டி விடுவது செமயாக இருக்கும். அந்த சுவராஸ்யம் இதில் இல்லை.
3. ஒரிஜினல் நாவலில் கொலையாளி வேறு ஒருவர், இந்த வெப் சீரிசில் திரைக்கதைப்படி கொலையாளி வேறு ஒருவர்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் : 13+ குடும்பத்துடன் பார்க்கலாம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பிரமாதமான திரில்லர் எனக்கொண்டாடவும் முடியவில்லை. ரொம்ப சுமார் என தள்ளவும் முடியபில்லை. சராசரி ரகம்.
ரேட்டிங்க் 2.5 /5