சீரியல்களுக்கு ஊர்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். வயதானவர்கள் வீட்டில் இருப்பவர்களே சீரியல் பார்ப்பார்கள் என்று நம்மிடம் ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள், கல்லூரி செல்லும் ஆண்கள், பெண்கள் என பல தரப்பட்ட மக்களும் சீரியல் பார்த்து வருகின்றனர்.
அப்படி ரசிகர்களின் பேவரைட் ஆன ஒரு சீரியல் தான் பாக்கியலட்சுமி. 1000 எபிசோட்களை கடந்து சாதனை படைத்த பாக்கியலட்சுமி சீரியல் வாரம் வாரம் டிஆர்பியில் டாப் 3 இடங்களை பிடித்து விடும். சமீபத்தில் இந்த சீரியல் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. பெரியளவில் கதைகளம் ஏதுமில்லாததால் கடந்த 3 வாரங்களுக்கு மேலாகவே சீரியல் பின் தங்கியுள்ளது.
பாக்கியாவை விவாகரத்து செய்த கோபி, ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். இவரின் கள்ளக்காதல் விஷயம் பாக்கியாவிற்கும், வீட்டிற்கும் தெரியவருவதே சுவாரஸ்யமாக இருந்தது. தற்போது இவர்களின் மகன்கள் வாழ்க்கையில் புது புது ட்விஸ்ட் வந்தது. இவர்களின் கதையும் மந்தநிலையில் செல்வதால் டிஆர்பியில் பின் தங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த சீரியலில் வீட்டு வேலை செய்யும் பெண்ணாக நடிக்கும் கம்பம் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நேற்று விபத்தில் சிக்கி இருக்கிறார். படுகாயம் அடைந்த அவர் கை முறிந்து கட்டுடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில் “கடந்த (12/02/2024) இரவு 8.30 மணிக்கு தலைக்கு வந்தது தலைபாகையோடு போய் விட்டது …..(இப்படித்தான் மனதை தேற்றிகொண்டேன்)…..எல்லாம் அவன் செயல்” என அவர் கூறி இருக்கிறார்.