
விஜய் டிவியின் ஹிட் சீரியலாக ஒளிப்பரப்பப்பட்டு வந்த பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரவுள்ள நிலையில், கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஒளிப்பரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இந்த தொடர் விஜய் டிவியில் இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது. கணவரால் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்ட பெண், சுயமாக முன்னேறி எப்படி குடும்பத்தை கவனித்து கொள்கிறார்கள் என்பதை கருவாக வைத்து இந்த தொடர் நகர்ந்து வருகிறது.
பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் இந்த சீரியல் முடிவடைந்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில், இனியா திருமணத்திற்கு பிறகு புதிய கதை தொடங்கி ஓடி கொண்டிருக்கிறது. 3 பிள்ளைகளையும் கரை சேர்த்து விட்டதன் மூலம் கதை முடிந்துவிட்டது என ரசிகர்கள் நினைத்த நிலையில், இனியாவின் கணவர் குடும்பத்தால் அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது.
நிதிஷை விவாகரத்து செய்ய முடிவு செய்து விட்ட இனியா, சுதாகரின் சூழ்ச்சியை தாங்க முடியாமல் அடுத்தடுத்து வாக்குவாதங்களில் ஈடுபட்டு பிரச்சனையில் சிக்கி கொள்கிறார். அந்த வகையில் நேற்றைய எபிசோட்டில், இனியா நிதிஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட, அவரும் அடிக்கவந்ததால் எனன் செய்வதென்று தெரியாமல் நிதீஷை கீழே தள்ளிவிடுகிறார்.
இதில் சுவற்றில் மோதிய நிதிஷ் நிலைதடுமாறி சரிந்து விழுந்தார். உடனே பதறி போன இனியா, நிதிஷை எழுப்ப முயற்சிக்கிறார். தண்ணீர் தெளித்தும் நிதிஷ் எழும்பாததால் அதிர்ச்சியில் உறைகிறார். மேலும் மூச்சு வரவில்லை என்றவுடன் இனியாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இனி நிதிஷ் இறந்து விட்டாரா, அல்லது வேறு ஏதேனும் கதை நகர்ந்து செல்லுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கும் நிலையில், பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரவுள்ளது வெட்டவெளிச்சமாக தெரிந்து விட்டது.
இந்த சீரியல் சில வாரங்களில் நிறைவடையவுள்ள நிலையில், இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. பாக்கியலட்சுமி தொடரின் க்ளைமேக்ஸ், திருப்புமுனை காட்சிகளுடன் படமாக்கப்பட்டுள்ளன. அதாவது கதைப்படி பாக்கியலட்சுமியின் கணவரான கோபி திருந்தி வாழ்ந்து கொண்டிருப்பதால் க்ளைமேக்ஸில் இருவரையும் சேர்த்து வைக்கும் காட்சிகள் எடுக்கபப்ட்டுள்ளன.
இந்த நிலையில், பாக்கியலட்சுமி நிறைவு நாள் படப்பிடிப்பில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன, இத்தொடரில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களும் இதில் நடித்ததின் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். இது கதாபத்திரங்களுக்கு மட்டும் இல்லை, அதனுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு பெரிய வருத்தத்தையே ஏற்படுத்தும்.