
பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1000 எபிசோடை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. குடும்ப பெண்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த சீரியல் அதிகளவில் பிரபலமானது. சீரியல் 2020ம் ஆண்டு ஜுலை 27ம் தேதி முதல் தொடங்கியது.
இந்த சீரியலில் சுசீத்ரா ஷெட்டி பாக்கியலட்சுமியாகவும், சதீஷ் குமார் கோபிநாத்தாகவும், ரேஸ்மா பசுபுலேட்டி ராதிகாவாகவும், ராஜலட்சுமி ஈஸ்வரியாகவும் நடித்து வருகின்றனர். குடும்பத்தில் நடக்கும் கதையை எதார்த்தமாக எடுத்து காட்டி வருகின்றனர்.
இந்த கதையில் முதலில் கோபி பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்தார். தொடர்ந்து ராதிகாவை திருமணம் செய்த அவர், அங்கேயும் பிரச்சனைகளை சந்தித்து தற்போது அவரையும் விவாகரத்து செய்துவிட்டார். இப்போது அவரும் கோபி வாழ்க்கையை விட்டு பிரிந்து பெங்களூர் சென்று செட்டில் ஆகிவிட்டதாக கதை நகர்கிறது. தொடர்ந்து பாக்கியாவின் வீட்டிலேயே வசித்து வரும் கோபி, தனது வேலையை பார்த்து வருகிறார். சுமார் 1 வருடம் ஆகிவிட்டதாக டக்குனு கதையை நகர்த்திவிட்டனர். இந்த கதையில் உள்ள சிக்கல்கள் பிரச்சனைகளை இயக்குனர் சரி செய்து வருகிறார்.
எழில் ஒரு பக்கம் இயக்குனராக ஆகி பேமஸாகிவிட்டதாகவும், செழியன் தன் வாழ்க்கையை பார்க்க தனியாக சென்றுவிட்டது போலவும் கதை நகர்கிறது. புது ட்விஸ்டாக இனியா தான் செல்வியின் மகனை காதலித்து வருகிறார். இவர்களுக்கும் திருமணத்தை செய்துவிட்டு சீரியலை முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் சீரியல் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியல் கதாநாயகி சுசீத்ரா ஷெட்டி புதிய சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார். அதன் புரோமோ காட்சிகள் வெளிவர ரசிகர்கள் பாக்கியலட்சுமி முடிய போவதை உறுதி செய்து விட்டனர்.
கன்னட சீரியலான இந்த புதிய சீரியலுக்கு சிந்து பைரவி என பெயரிடப்பட்டுள்ளது. கபடி விளையாட்டு போட்டிகளுடன் புரோமோ வீடியோ தொடங்குகிறது. கன்னட சேனலான உதயாவின் இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.