
பாக்கியலட்சுமி சீரியல் பல நாட்களாக டல் அடித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய ட்விஸ்ட் கிளம்பியுள்ளது.
பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் முடிவடைந்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில், இனியா திருமணத்திற்கு பிறகு புதிய கதை தொடங்கி ஓடி கொண்டிருக்கிறது. 3 பிள்ளைகளையும் கரை சேர்த்து விட்டதன் மூலம் கதை முடிந்துவிட்டது என ரசிகர்கள் நினைத்த நிலையில், பாக்கியலட்சுமியின் ரெஸ்டாரண்ட் பிரச்சனை, கவுன்சிலர் பிரச்சனை என தொடர்ந்து கொண்டே வருகிறது.
தற்போது இனியாவின் மாமனார் வீட்டு கதை தான் ஹைலாட்டாக ஓடி கொண்டிருக்கிறது. நிதிஷ் குறித்த உண்மை கோபி வீட்டிற்கு தெரியவந்தால் என்ன நடக்கும் என்றே கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இதுவே ரசிகர்களை சற்று டல் அடித்து வரும் நிலையில், ரசிகர்களை மீண்டும் திசை திருப்ப கோபியின் 2வது மனைவியான ராதிகா உள்ளே வருகிறார்.
மகன் தனியாக இருப்பதை நினைத்து வருத்தமடையும் ஈஸ்வரி, பாக்கியாவை மீண்டும் கோபியை ஏற்று கொள்ள சொல்லி வற்புறுத்துகிறார். இதற்கு பாக்கியா மயங்கவில்லை என்ற நிலையில், தற்போது ராதிகாவிடம் அணுகவுள்ளார்.
இன்றைய எபிசோட்டில், போதைக்கு அடிமையாகி வீட்டிற்கு வந்த நிதிஷை கண்டு இனியா சந்தேகமடைகிறார். இது ஒரு பக்கம் இருக்க பல மாதங்களுக்கு பிறகு ராதிகா சென்னை வந்தது போன்றும், ஈஸ்வரி அவரை சந்திக்க விரும்புவதாகவும் பேசுகிறார். உடனே ராதிகாவும் நாளை உங்களை நேரில் சந்திக்கிறேன் என்று கூறுகிறார். ராதிகாவின் மனதில் இடம்பிடிப்பதற்காக ஈஸ்வரியும் அடுக்கடுக்கான பொய்களை அள்ளி தெளிக்கிறார். அதில், தான் தற்போது அடிக்கடி உன்னை நினைப்பதாகவும், கோபியின் அப்பா கனவில் வந்தால் கூட உன்னை தான் கேட்பார் என்றெல்லாம் கூறுகிறார். இதனை கேட்ட ராதிகாவும், இத்தனை நாட்களுக்கு பிறகு நம்மை நினைக்கிறார்களே என்று மகிழ்ச்சியடைகிறார்கள். மேலும் பாக்கியாவுடன் பேசி வருவதாகவும் கூறினார்.
நாளைக்கான புரோமோவில், கடையில் வைத்து ராதிகாவிடம் பேசிய ஈஸ்வரி மீண்டும் தனது மகனுடன் சேர்ந்து வாழுமாறு கேட்கிறார். இதற்கு ராதிகா என்ன சொல்லுவார். மீண்டும் இந்த கதை இப்படி தான் செல்லுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நாளை ராதிகாவின் பதிலை பொறுத்தே அடுத்த கதை என்னவென்று தெரியவரும்.