கீழே விழுந்ததில் கலைந்த கரு; அதிர்ச்சியில் ராதிகா! பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்!

Baakiyalakshmi
Baakiyalakshmi

பாக்கியலட்சுமி தொலைக்காட்சி தொடரில் இந்த வாரம் ராதிகாவின் கரு கலைய, அந்தப் பழி வீணாக ஈஸ்வரி பக்கம் செல்கிறது.

1000 எபிசோடை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஒரு பக்கம் செழியன் வாழ்க்கை சீரழிந்து, தற்போது மீண்டும் புத்துணர்வு பெற்று வரும் நிலையில், எழிலை குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லி ஈஸ்வரி வற்புறுத்தி வருகிறார். ஒரு பக்கம் சந்தேகத்தின் உச்சியில் இருக்கும் ஜெனியிடம் செழியன் மாட்டித் தவித்துக் கொண்டிருக்கிறார். இப்படி கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், திடீரென தாத்தாவாக இருக்கும் கோபி தனது 2வது மனைவி ராதிகா மூலம் மீண்டும் அப்பாவாகி உள்ளார்.

இந்த விஷயம் ஒட்டுமொத்த வீட்டிற்கும் தெரிய வர, ‘இது எனது வீடு. அதனால் வீட்டை விட்டு கிளம்புங்கள்’ என்று பாக்கியா கோபியிடம் கூறினார். வீட்டை விட்டுப் போவதை தாங்கிகொள்ள முடியாத கோபி, பாக்கியாவை பழி வாங்குவதற்காக தனது தாய் ஈஸ்வரியையும் தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.

ராதிகா வீட்டிற்கு சென்ற ஈஸ்வரியால் தினமும் சண்டை, சச்சரவுகள்தான். இதனால் வீட்டில் ஒழுங்காக சாப்பிடாத ஈஸ்வரி அடிக்கடி உடம்புக்கு முடியாமல் போகிறார். ஒரு கட்டத்தில் சாப்பிடாமல் ஈஸ்வரி மயக்கம் போட, அவர் குணமாகி மீண்டும் ராதிகா வீட்டிற்கே வருகிறார். இனிமேல் ஈஸ்வரி இங்கு வரமாட்டார் என்று நினைத்து கொண்டிருந்த கமலா, ராதிகாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. மீண்டும் நம்பி வந்த ஈஸ்வரியை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைத்த கோபி, மூன்று நேரமும் தாயை பார்த்துப் பார்த்து கவனித்துக் கொள்கிறார்.

ராதிகாவிற்கும், ஈஸ்வரிக்கும் ஏற்கெனவே சண்டை உச்சக்கட்டத்தில் இருக்க, இந்த வாரம் வெளியான புரோமோவில், ராதிகா தடுக்கி கீழே விழுகிறார். உடனே ஈஸ்வரியும் பதறியபடி ராதிகாவை கூப்பிடுகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராதிகாவின் கரு கலைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.உடனே கண் கலங்கிய ராதிகா குழந்தை வேண்டாம் என நினைத்த உங்க அம்மாதான் என்னை கீழே தள்ளிவிட்டார் என்று கோபியிடம் குற்றம் சாட்டுகிறார்.

இதை நம்பிய கோபியும், ஈஸ்வரியை கடுமையாகத் திட்டுகிறார். இதனால் மனமுடைந்த ஈஸ்வரி கெட்ட பழியுடன் பாக்கியா வீட்டிற்கே சென்று நடந்ததைக் கூறுகிறார். இந்த புரோமோ காட்சிதான் தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கெனவே அட்மிட் ஆன ஈஸ்வரியின் நிலைக்கு ராதிகா காரணம் என சொன்னது போல், தற்போது ராதிகாவின் நிலைக்கு ஈஸ்வரிதான் காரணம் என்று ஆகிவிட்டது. மாறி மாறி இருவரின் சண்டை தொடர்ந்து வருகிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com