மீட் பண்ணப்போகும் ஜெனி - செழியன்... ஒன்று சேர்வார்களா?

பாக்கியலட்சுமியில் அடுத்து என்ன நடக்கும்?
Jeni - Chezhiyan
Jeni - Chezhiyan

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

நேற்றைய எபிசோட்டில் பாக்கியா ஜெனியிடம் செழியனை பொன்னு பார்க்க வந்ததை தெரிவித்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ஜெனியும் செழியனும் மீட் பண்ணுவதற்கு மரியம் சம்மதித்துள்ளார்.

சீரியல்களுக்கு ஊர்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். வயதானவர்கள் வீட்டில் இருப்பவர்களே சீரியல் பார்ப்பார்கள் என்று நம்மிடம் ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள், கல்லூரி செல்லும் ஆண்கள், பெண்கள் என பல தரப்பட்ட மக்களும் சீரியல் பார்த்து வருகின்றனர்.

அப்படி ரசிகர்களின் பேவரைட் ஆன ஒரு சீரியல் தான் பாக்கியலட்சுமி. 1000 எபிசோட்களை கடந்து சாதனை படைத்த பாக்கியலட்சுமி சீரியல் வாரம் வாரம் டிஆர்பியில் டாப் 3 இடங்களை பிடித்து விடும். ஆனால், தற்போது டிஆர்பியில் பின் தங்கிய இடத்திற்கு சென்றதால், ஏதேதோ செய்ய முயற்சிக்கின்றனர்.

ஒரு பக்கம் எழில் வாழ்க்கை சீர்குலைந்து போக, இன்னொரு பக்கம் செழியன் வாழ்க்கை விவாகரத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறது. இவர்களின் விவாகரத்து பிரச்சனையே முடிவடையாத நிலையில், ஜெனியின் தந்தை அவருக்கு புது மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும், விவாகரத்து கிடைத்தவுடன் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கோபியிடம் கூறுகிறார்.

இதையும் படியுங்கள்:
பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ரோபோ ஷங்கர் மகள் திருமணம்... வைரலாகும் போட்டோஸ்!
Jeni - Chezhiyan

இதை கேட்டு கொந்தளித்த கோபி, இதை அனைவரிடமும் சொல்ல பிரச்சனை முற்றி செழியனுக்கும் பெண் பார்க்கும் படலத்தில் அனைவரும் களமிறங்கியுள்ளனர். இதனால் நேற்றைய எபிசோட்டில் கடுப்பான பாக்கியாவும், செழியனும் திருமணத்தில் சம்மதமில்லை என கூறி அனைவரையும் வெளியேற்றிவிட்டனர். மேலும், ஜெனி வீட்டிற்கு சென்ற பாக்கியா செழியனை பொன்னு பார்க்க வந்ததை கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெனி தனது தாயிடம் கதறி அழுகிறார். செழியன் மீது கொண்ட ஜெனியின் பாசத்தை புரிந்த மரியம், பாக்கியாவை அழைத்து இருவரையும் மீட் பண்ணுவதற்கு சம்மதம் தெரிவித்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த பாக்கியாவும், எழிலும் செழியனை டிப் டாப்பாக கிளப்பி அழைத்து செல்கின்றனர்.

அப்போது ஈஸ்வரி எங்கே செல்கிறீர்கள் என்று கேட்க எழிலும், பாக்கியாவும் மாறி மாறி பொய் சொல்கின்றனர். இதோடு இன்றைய நிகழ்ச்சி முடிவடைகிறது. ஆனால் ஈஸ்வரிக்கு தெரியாமல் பாக்கியா ஜெனியிடம் அழைத்து சென்று இவர்களை சேர்த்து வைப்பாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com