பாக்கியாவுக்கு சப்போர்ட் பண்ணிய ராதிகா.. உச்சக்கட்ட பரபரப்பில் பாக்கியலட்சுமி!

பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி

பெண்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதை மையப்படுத்தி பாக்கியலட்சுமி சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலில் கதாநாயகியாக சுசித்ரா ஷெட்டி நடித்து வருகிறார். தனது அசாத்திய நடிப்பால் பெண்களுக்கு ஒரு உந்துதலை அளித்து வருகிறார்.

அடுத்தடுத்து தொழிலில் அடிவாங்கிய பாக்கியாவிற்கு வீட்டிலும் தொடர் பிரச்சனை இருந்து வருகிறது. அந்த வகையில் செழியன் மாலினியுடன் அடிக்கடி வீட்டில் தங்க, ஒரு கட்டத்திற்கு மேல் இந்த விஷயம் பாக்கியாவிற்கு தெரியவருகிறது. பாக்கியா எச்சரித்தும் மாலினி அதை வீட்டில் வந்து அனைவரிடமும் கூறுகிறார். இதனால் உச்சக்கட்ட கோபமடைந்த ஜெனி, செழியனை ஓங்கி கன்னத்தில் அறைந்து வீட்டை விட்டு செல்கிறார். இதனால் நிலைகுலைந்த வீட்டார், அனைவரும் பாக்கியாவையே குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனை அறிந்த ராதிகா, பாக்கியாவா ஒரு பெண்ணிடம் போய் செழியனை பழக சொன்னார்கள் என கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி நீயும் மாலினி மாதிரி தானே என சொல்கிறார். இதில் கொந்தளித்த ராதிகா, நானும் மாலினியும் ஒன்றல்ல, கோபியும் செழியனும் தான் ஒன்று. பெண்களை ஏமாற்றுகிறார்கள் என கூறினார். மேலும், பாக்கியாவிற்கு டீ போட்டு கொடுக்கிறார்.

இந்த புரோமோ காட்சிகளை பார்த்த பலரும் கண்கலங்கி விட்டதாக கமெண்ட் தட்டி வருகின்றனர். இந்த மாலினி பிரச்சனை எப்போது முடியும் என்று ஒரு புறம் இருக்க, அடுத்ததாக எழில் பிரச்சனை காத்து கொண்டிருக்கிறது. அமிர்தாவின் முதல் கணவரான கணேஷ், அமிர்தாவையும் குழந்தையும் அழைத்து செல்வதற்காக காத்து கொண்டிருக்கிறார். இந்த 2 பிரச்சனைகளையும் பாக்கியா எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com