
விஜய் டிவியின் ஹிட் சீரியலாக ஒளிப்பரப்பப்பட்டு வந்த பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரவுள்ள நிலையில், சப் கலெக்டர் ஆன ஆகாஷுக்கும் இனியாவுக்கும் திருமணம் நடந்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஒளிப்பரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இந்த தொடர் விஜய் டிவியில் இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது. கணவரால் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்ட பெண், சுயமாக முன்னேறி எப்படி குடும்பத்தை கவனித்து கொள்கிறார்கள் என்பதை கருவாக வைத்து இந்த தொடர் நகர்ந்து வருகிறது.
பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் இந்த சீரியல் முடிவடைந்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில், இனியா திருமணத்திற்கு பிறகு புதிய கதை தொடங்கி ஓடி கொண்டிருக்கிறது. 3 பிள்ளைகளையும் கரை சேர்த்து விட்டதன் மூலம் கதை முடிந்துவிட்டது என ரசிகர்கள் நினைத்த நிலையில், இனியாவின் கணவர் குடும்பத்தால் அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது.
ஒருவழியாக நிதிஷின் கதையை முடித்து வைத்துவிட்ட டைரக்டர், மீண்டும் இனியாவை ஆகாஷுடன் சேர்த்து வைத்து விட்டார். நிதிஷை சுதாகர் கொலை செய்த நிலையில், ஒருவழியாக பாக்கியலட்சுமி குடும்பத்தினர் அதை நிரூபித்து கோபியை வெளியே கொண்டு வந்துவிட்டனர்.
இந்த சீரியல் சில வாரங்களில் நிறைவடையவுள்ள நிலையில், இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. பாக்கியலட்சுமி தொடரின் க்ளைமேக்ஸ், திருப்புமுனை காட்சிகளுடன் படமாக்கப்பட்டுள்ளன. அதாவது கதைப்படி பாக்கியலட்சுமியின் கணவரான கோபி திருந்தி வாழ்ந்து கொண்டிருப்பதால் க்ளைமேக்ஸில் இருவரையும் சேர்த்து வைக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தன.
இந்த நிலையில், இன்றைய எபிசோட்டில், சப் கலெக்டர் ஆன ஆகாஷ், பாக்கியாவின் வீட்டிற்கு வந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார். அப்போது ஈஸ்வரி ஆகாஷ் - இனியா திருமணம் பற்றி பேச வருகிறார். ஆனால் பாக்கியா தடுக்கவும், அதை நிறுத்தி விடுகிறார். தொடர்ந்து செல்வியோ, நடந்த விஷயங்கள் அனைத்தையும் மறந்து ஆகாஷிற்கு இனியாவை பெண் கேட்கிறார். உடனே பாக்கியாவின் குடும்பத்தினர் ஒத்து கொள்ள இவர்களின் நிச்சயதாரத்தம் நடைபெற்றது. அப்போது இனியாவின் முதல் கணவரான நிதிஷின் தாயாரும் நிகழ்ச்சியில் பங்கேற்று அவரை வாழ்த்தி சென்றார்.
சமீபத்தில் கூட பாக்கியலட்சுமி நிறைவு நாள் படப்பிடிப்பில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ஒரு குடும்ப பெண்ணாக வீட்டிற்குள் முடங்காமல் எழுந்து ஓடுவதற்கு இந்த சீரியல் எடுத்துக்காட்டாக விளங்கிய நிலையில், தற்போது முடிவடையவுள்ளதால் ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.