பாக்கியலட்சுமி சீரியலில் கோபி நிலை இதுதான்... அடுத்து வரும் அப்டேட்!

Baakiyalakshmi
Baakiyalakshmi

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து நடக்கபோவது குறித்து கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

1000 எபிசோடை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஒரு பக்கம் செழியன் வாழ்க்கை சீரழிந்து, தற்போது மீண்டும் புத்துணர்வு பெற்று வரும் நிலையில், எழிலை குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லி ஈஸ்வரி வற்புறுத்தி வருகிறார். ஒரு பக்கம் சந்தேகத்தின் உச்சியில் இருக்கும் ஜெனியிடம் செழியன் மாட்டித் தவித்துக் கொண்டிருக்கிறார். இப்படி கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த வார எபிசோட்டில் ராதிகா தவறி விழுந்ததில் கரு கலைந்து விட்டது.

இதனால் கொந்தளித்த கோபி, ஈஸ்வரி தான் தள்ளிவிட்டார் என நினைத்து தாயிடம் சண்டைக்கு செல்கிறார். இதனால் கதை விறுவிறுப்பாகியுள்ளது. மேலும் தாயை வீட்டை விட்டு வெளியேற்றியதால் ஈஸ்வரி நிலைகுலைந்துள்ளார்.

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ் அவ்வப்போது, இந்த சீரியல் குறித்த அப்டேட் தெரிவித்து வரும் நிலையில், தற்போது ஒரு புது அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
மகாராஜா படத்தின் 10 நாள் வசூல் இத்தனை கோடியா?
Baakiyalakshmi

ஏற்கனவே இனி வில்லன் தான் கதையில் நிறைய ட்விஸ்ட் அண்ட் த்ரில்லிங் வரப்போவதாக கூறியிருந்தார். தற்போது, லேட்டஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ ஒன்றை வெளியிட்டு, "சரக்கு தான். கோபி மறுபடியும் சரக்கு அடிக்க ஸ்டார்ட் பண்ணி ஆச்சு. பார் செட்டப்.. ஃபுல் பாட்டில். என்னெல்லாம் நடக்க போகுதோ" என பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் மறுபடியும் குடித்துவிட்டு தாயிடம் செல்லபோகிறாரா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இன்றைய எபிசோட்டில் பாக்கியா, கோபியை திட்டி விளாசுகிறார். எப்படி நீங்கள் ஈஸ்வரியை இப்படி பேசுவீர்கள் என்று கேட்டு திட்ட, கோபி நிலை தடுமாறுகிறார். மறுபுறம் ஈஸ்வரி கண்ணீர் வடித்தபடி புலம்பி கொண்டே இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com