செழியனுக்கு விவாகரத்து கொடுத்தாரா ஜெனி.. என்ன நடந்தது? பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்!

பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

சீரியல்களுக்கு ஊர்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். வயதானவர்கள் வீட்டில் இருப்பவர்களே சீரியல் பார்ப்பார்கள் என்று நம்மிடம் ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள், கல்லூரி செல்லும் ஆண்கள், பெண்கள் என பல தரப்பட்ட மக்களும் சீரியல் பார்த்து வருகின்றனர்.

அப்படி ரசிகர்களின் பேவரைட் ஆன ஒரு சீரியல் தான் பாக்கியலட்சுமி. 1000 எபிசோட்களை கடந்து சாதனை படைத்த பாக்கியலட்சுமி சீரியல் வாரம் வாரம் டிஆர்பியில் டாப் 3 இடங்களை பிடித்து விடும்.

இந்த நிலையில் பாக்கியா வீட்டில் அடுத்தடுத்து பிரச்சனைகள் கிளம்பி வருகிறது. முதல் மகனான செழியன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் அது விவாகரத்து பிரச்சனைக்கு சென்றது. 2வது எழிலின் வாழ்க்கையோ அமிர்தாவின் கணவர் வருகையால் நிலை குலைந்துள்ளது. இப்படி இருக்கையில் இன்று மீண்டும் நீதிமன்றம் செல்கிறது செழியன் - ஜெனி விவாகரத்து பிரச்சனை.

அனைவரும் தீர்ப்புக்காக காத்திருந்த நிலையில் செழியன் தான் திருந்திவிட்டதாக கூறி மனம் வருந்தியதால் நீதிபதி விவாகரத்து வழங்காமல் இருவரையும் கவுன்சிலிங் அனுப்ப கூறி வழக்கை தள்ளி வைத்தார். இது ஒரு புறம் இருக்க ஜெனி அப்பா கண் அசந்த நேரத்தில் ஜெனியை காரில் அழைத்து செல்கிறார் செழியன். வெளியில் சென்ற ஜெனியின் தந்தையோ மீண்டும் காருக்கு செல்கிறார். அங்கு காரும் இல்லை, ஜெனியும் இல்லை என்று தெரிந்தால் என்ன ஆகும் என பரபரப்பாக இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

logo
Kalki Online
kalkionline.com