அப்பாவாக போவதை ஈஸ்வரியிடம் கூறிய கோபி... அடுத்து என்ன நடக்கும்... அனல் பறக்கும் பாக்கியலட்சுமி புரோமோ!

Baakiyalakshmi serial
Baakiyalakshmi serial

1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஒரு பக்கம் செழியன் வாழ்க்கை சீரழிந்து தற்போது மீண்டும் புத்துணர்வு பெற்று வரும் நிலையில், எழிலை குழந்தை பெற்று கொள்ள சொல்லி ஈஸ்வரி வற்புறுத்தி வருகிறார். ஒரு பக்கம் சந்தேகத்தின் உச்சியில் இருக்கும் ஜெனியிடம் செழியன் மாட்டி தவித்து கொண்டிருக்கிறார். இப்படி கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், திடீரென தாத்தாவாக இருக்கும் கோபி தனது 2வது மனைவி ராதிகா மூலம் மீண்டும் அப்பாவாகியுள்ளார்.

இதை அறிந்து கொண்ட அவர்கள் அதிர்ச்சியில் வீட்டில் எப்படி சொல்வது என புலம்பி வருகின்றனர். ஆனால் ராதிகாவோ தனது வீட்டில் சொல்லிவிட்டு, கோபியையும் அவரது வீட்டில் சொல்ல சொல்லி வற்புறுத்துகிறார். மேலும் ராதிகாவே பாக்கியாவிடமும் இந்த விஷயத்தை கூறியுள்ளார். வழக்கம் போல் நேற்றைய முன் தினம் சனிக்கிழமை எபிசோடில் வீட்டில் விஷயத்தை சொல்ல புறப்பட்ட கோபிக்கு செழியன் மகள் பெயர் சூட்டு விழா தெரியவந்தது. விழாவில் தாத்தாவாக நீதான் இருக்க வேண்டும் என கோபியின் தந்தை கூற குழந்தை விஷயத்தை தெரிவிக்காமல் சென்றுவிடுகிறார். தொடர்ந்து இன்றைய எபிசோடில் செழியனின் மகளுக்கு தான் வைத்த பெயர் தான் இருக்க வேண்டும் என ஜெனியின் தந்தை சண்டை போட, ஒரு பக்கம் ஈஸ்வரி மல்லுக்கு நிக்க வீடே ரெண்டாகியது.

அந்த நேரத்தில் திடீரென எண்ட்ரி ஆன பழனிசாமி, வழக்கம் போல் கலகலவென பேசி குடும்பத்தில் உள்ள பிரச்சனையை தீர்த்து ஈஸ்வரியை பெயர் வைக்க கூறினார். தொடர்ந்து குழந்தைக்கு யாழினி என ஈஸ்வரி பெயர் சூட்டினார். அனைவருக்கும் பெயர் பிடித்து போக குழந்தை காதில் குடும்ப உறுப்பினர்கள் பெயரை உச்சரித்தனர்.

இந்த நிலையில், இந்த வாரத்திற்கான புரோமோ வெளியாகி அதிர்ச்சி கிளப்பியுள்ளது. அதில், தனது தாய் ஈஸ்வரியை தனியாக காரில் அழைத்து சென்ற கோபி தான் அப்பாவாக போவதை கூறுகிறார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஈஸ்வரி வீட்டிற்கு சென்றவுடன் படபடவென தண்ணீரை குடிக்கிறார். ஈஸ்வரிக்கு உடல்நிலை மோசமானதாக நினைத்து பாக்கியாவும் பதறுகிறார். தொடர்ந்து எரிமலையாக கொந்தளித்த ஈஸ்வரி, ராதிகாவிடம் நேரடியாக சென்று இந்த குழந்தையை நீ பெக்க கூடாது என கண்டிஷன் போடுகிறார். ஆனால் ராதிகாவோ "முடியாது, இந்த குழந்தை வேண்டுமா வேண்டாமா என்று நான் தான் முடிவு செய்யனும் நீங்க சொல்லக்கூடாது" என கூறி ஈஸ்வரியை கத்துகிறார். இதனால் மனமுடைந்த ஈஸ்வரி வாடிய முகத்துடன் வெளியேறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதனால் வீட்டில் அடுத்து எந்த மாதிரியான பிரச்சனை வெடிக்க போகிறது என பொருத்திருந்து பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com