பிக்பாஸ் வினுஷாவுக்கு என்னாச்சு? வெளியான போட்டோவால் ரசிகர்கள் ஷாக்!

வினுஷா
வினுஷா
Published on

பிரபல சீரியல் பாரதி கண்ணம்மா மூலம் அறிமுகமானவர் நடிகை வினுஷா. மாடலிங் துறையில் இருந்து நடிக்க வந்த வினுஷாவுக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் 7 விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கும் நிலையில், தானுண்டு தன் வேலையுண்டு இருந்த வினுஷா திடீரென எலிமினேட் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான எபிசோட்ட் ஒன்றில் நிக்ஸன் பேசியதாக ஒரு கருத்து ஒளிபரப்பப்பட்டது. அதில், நிக்ஸன் வினுஷாவின் உடல் அமைப்பு குறித்து கொச்சையாக பேசியிருப்பார். இதற்கு விளக்கம் கொடுத்த அவர், தான் தவறாக பேசவில்லை என்றும், அப்படி நினைத்தால் சாரி என்றும் கூறினார்.

மேலும் இதை தான் நேரடியாகவே வினுஷாவிடம் கூறியதாகவும் தெரிவித்தார். இதனை வெளியில் இருந்து பார்த்து கொந்தளித்த வினுஷா, தனது மனக்குமுறலை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் நிக்சனிடம் வினுஷா பற்றி கூறி விஷயத்தை கேட்டு சண்டையிட்டார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற நிக்சன் அர்ச்சனாவை கொலை மிரட்டல்விடுக்கும் தோனியில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

வினுஷா
வினுஷா

இது ஒரு புறம் இருக்க வைல்டு கார்டு எண்ட்ரியில் வினுஷா வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் வர்மா மற்றும் அனன்யா உள்ளே சென்றனர். ஏன் வினுஷா செல்லவில்லை என ரசிகர்கள் கமெண்ட் தட்டி வந்த நிலையில், தான் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், சீக்கிரம் வருகிறேன் என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்னாச்சு, சீக்கிரம் வாருங்கள், இதனால் தான் பிக்பாஸிற்குள் செல்லவில்லையா என கமெண்ட் தட்டி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com