விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 6 சீசன்களை கடந்த பிக்பாஸ், தற்போது 7வது சீசனை தொட்டுள்ளது. இந்த சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடங்கி 70 நாட்களை கடந்து ஓடி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் பிக்பாஸ் முன்னோட்டம் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படும் விதமாக அமைந்துள்ளது. அதன் படி இன்று வெளியான புரோமோவில் மிட் வீக் நாமினேஷன் நடைபெறுகிறது. யாரும் எதிர்பாராத ட்விஸ்டாக இது அமைந்துள்ளது.
எந்த சீசனிலும் இல்லாததாக 7வது சீசனில் நிறைய புதுபுது விஷயங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்படி தான் இந்த பிக்பாஸ், ஸ்மால் பாஸ் கான்செப்ட், இந்த விஷயத்தை அனைவரும் வரவேற்கின்றனர் தொடர்ந்து ஏற்கனவே ஒரு வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் 5 பேர் உள்ளே வந்த நிலையில், 7வது சீசனில் வெளியே சென்ற 2 நபர்கள் மீண்டும் ஒரு வைல்டு கார்டு மூலம் உள்ளே வந்தனர்.
இப்படி அடுத்தடுத்து பல ட்விஸ்ட்களை கொண்ட பிக்பாஸ் சீசன் 7 தற்போது மேலும் ஒரு ட்விஸ்டை கொண்டு வந்துள்ளது. அதாவது எலிமினேஷன் என்பது நடைபெறுவது சாதரணமானது தான். வழக்கமாக வார இறுதியில் வோட்டிங் அடிப்படையில் கமல்ஹாசன் ஒருவர் அல்லது இருவரை எலிமினேட் செய்வார், ஆனால் வியாழக்கிழமையான இன்று மிட் வீக் எலிமினேஷன் நடைபெறுகிறது. நாமினேட் செய்யப்பட்டவர்களில் ஒருவர் இன்று வெளியேற்றப்படுகிறார்.
இது தொடர்பான புரோமோ வெளியான நிலையில், அனன்யா ராவ் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.