ரெண்டுல ஒன்னு பாத்துடலாம் வாங்க.. வெளியானது அதிரடியான பிக்பாஸ் 7ன் அடுத்த ப்ரோமோ!

பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7Vijay Kumar

பிக்பாஸின் அடுத்த சீசன் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், பிக்பாஸ் 7ன்புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்போரின் விருப்பமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக பிக்பாஸ் இருந்து வருகிறது. வெளிநாடுகளிலும், இந்திய மொழிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தமிழிலும் 6 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அடுத்து வரவிருக்கும் 7வது சீசனையும் அவர்தான் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டு, அதன் புரொமோக்கள் தற்போது வெளிவந்துள்ளன.

இந்த நிலையில், பிக்பாஸ் 7 நிகழ்ச்சி எப்போது தொடங்குகிறது என்பது ரசிகர்கள் பலரின் கேள்வியாக உள்ளது. அவர்களுக்கெல்லாம் பதில் தரும் வகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி அக்டோபர் 2வது வாரத்தில் தொடங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பிக்பாஸ் சீசன் 7 எப்போது ஆரம்பிக்கும் என்கிற விபரத்தை ஸ்டார் விஜய் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஏற்கெனவே 2 ப்ரோமோ வெளியான நிலையில், தற்போது மேலும் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. வழக்கமாக பிக்பாஸில் ஒரே ஒரு பெரிய வீடு இருக்கும். அதில், ஆண்களுக்கு, பெண்களுக்கு என தனித்தனியாக பிரிக்கப்பட்டிருக்கும். இந்த முறை 2 வீடு என கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் வீடு 2 என்றால் 2 கிச்சன், 2 ஸ்விம்மிங் பூல், 2 கண்ஃபெஷன் ரூம், என கூறுகிறார். ஏன் சந்தோஷமும் டபுளாக இருக்க கூடாது என்றும், ரெண்டுல ஒன்னு பாத்திடலாம் வாங்க என கூறியுள்ளார். இந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com