ஐஷு தந்தை
ஐஷு தந்தை

பிக்பாஸில் இருந்து வெளியேறிய நிக்சன்.. குஷியான ஐஷு தந்தை.. வைரலாகும் போஸ்ட்!

Published on

பிக்பாஸில் இருந்து நிக்சன் வெளியேறியதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஐஷுவின் தந்தை போட்ட போஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் 7வது சீசன் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கும் நிலையில், நேற்று வார இறுதியில் நிக்சனும், ரவீனாவும் வெளியேற்றப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஐஷு என்பவர் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இவரும் நிக்சனும் செய்த ரகளைகள் இணையத்தில் வைரலாக பலரும் கேலி கிண்டல் செய்து வந்தனர். தொடர்ந்து ஐஷு வெளியே வந்த பிறகு இதற்கு அனைத்திற்கு மன்னிப்பு கோரி கடிதம் வெளியிட்டிருந்தார். இத்தனைக்கும் காரணமான நிக்சன் உள்ளே நன்றாக விளையாடி கொண்டிருந்தார். என்னதான் மகள் மீது கோபம் இருந்தால் அந்த பெயருக்கு காரணமாக நிக்சன் மீதும் ஐஷு குடும்பத்தார் கடும் கோபத்தில் இருந்தார்கள் என தெரிகிறது.

ஐஷு தந்தை பதிவு
ஐஷு தந்தை பதிவு

இந்த நிலையில், 90 நாட்களை கடந்து நேற்று நிக்சன் வெளியேறியவுடன் ஐஷு தந்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் பதிவிட்டுள்ளார். அதில், கிழ்ச்சியாக Vibe பண்ணுவதாக கூறி எஸ்.ஜே. சூர்யாவின் ரியாக்ஷன் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த ரியாக்‌ஷன் ஸ்பைடர் படத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரின் கதறலை கேட்டு எஸ்.ஜே.சூர்யா மகிழ்ச்சியில் வெளிப்படுத்தும் ரியாக்‌ஷன் தான். நிக்சன் வெளியேறியதால் தான் இந்த பதிவை ஐஷுவின் தந்தை வெளியிட்டார் என பலரும் கமெண்ட் தட்டி வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com